பக்கம்:ஆடும் தீபம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது94

ஆடும்\


எதிரில் போய் நின்றபோது, அவனுடைய சுருண்ட கேசம் கலந்து கிடந்தது; முகம் வெளிறியிருந்தது. கண்கள் கனலைப்போல் சிவந்து கிடந்தன. ராஜ நாயகத்துக்கு அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அருணாசலம் கவலைப்படாதேப்பா. அல்லிக்கு ஒன்று மில்லை,” என்றார் அவர், தைரியம் சொல்லும் பாவனையில். அவர்களிடையே இருக்கும் பரஸ்பர அன்பை எண்ணியபோது அவர் மனம் உருகத்தான் செய்தது.

‘கல்யாணத்துக்கு நாள் ரொம்ப கிட்ட நெருங்கிவந்து விட்டதே. அல்லிக்கு அதுக்குள்ளே செளக்கியமாகுமா என்கிற கவலை உனக்குஇருக்கத்தான் இருக்கும். அருணாசலம் கல்லெறி படலாம்; கண் எறியிலிருந்து தப்பிக்கமுடியாதப்பா, அல்லியை ப்பற்றிரொம்பபேருக்குப்பொறாமை. அதுவும் அவள் படத்திலே நடிச்சதிலிருந்து கேட்கவே வேண்டாம்.’’ என்று சொல்லிக்கொண்டே வந்தபோது, அருணாசலம் குறுக்கிட்டான்:

‘போதும் வாத்தியாரையா, அல்லிக்கும் எனக்கும் கல்யாணம் வேண்டாம்... ...!’’

ஒரு ஷண காலம் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாவற்றினுடைய மூச்சுக்களும் நின்றுவிட்டன போன்ற பேரமைதி அங்கே ஏற்பட்டது. நடப்பது கனவல்ல என்றறியவும் சிறிது அவகாசம் வேண்டியிருந்தது. அறிந்து கொண்டதும் உள்ளத்தில் ஆத்திரக்கடல் குமுறியது. எரிமலையின் கற்களென வெடித்துச் சிதறின. வார்த்தைகள்; என்னப்பா, குழந்தை விளையாட்டா விளையாடறே?’ என்றார் ராஜநாயகம். தந்தை மனம்’ வெடித்தது.