பக்கம்:ஆடும் தீபம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



96

ஆடும்


ஆமாம், அல்லி இடையில் வந்தவள். நம் பழக்கம் வெகுநாளையது’

முதலில் பெண் கணவனைத்தான் அடைகிறாள் . இடையிலே வந்ததுதான் குழந்தை என்று அதை உதாசீனம் செய்கிறாளா?அந்தக் குழந்தைக்காக வேண்டித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாளே? கணவனையும் அன்பென்னும் கயிற்றில் பிணைத்துப்போட முயலுகிறாள். சமயம் வருங்கால்- கணவன் மீறிப் போகுங்கால்-வாழ்வை வகுத்துக் கொடுத்த கணவனை குழந்தையின் நலனுக்காக வேண்டி அவள் உதறிவிடவும் சித்தமாகிறாள்.’

எனக்கு உபமான உபமேயங்கள் எல்லாம் மூளையிலே ஏறவும் இல்லை; பிடிக்கவும் இல்லை!” என்றான் அருணாசலம். . . “ உனக்கு மூளை என்று ஏதாவது இருந்தாலல்லவா ஏறும்?’ ராஜநாயகத்தின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சிலிர்த் தெழுந்தான் அருணாசலம்.

அதிகம் பேச வேண்டாம், ஐயா. அல்லி மாசுபட்டவள் என்று அருணாசலம் கனல் சிரிக்கச் சொன்னபோது, அவன் உடல உணர்ச்சி வசப்பட்டு நடுங்கியது.

அந்தப் பேரிடியை எதிர்பார்த்திருந்தவர் போன்று அலட்சியமாகச் சிரித்தார் ராஜநாயகம்.

‘இந்த மந்திரத்தை உனக்குச் சொன்னவன் அந்த அயோக்கியன் சாத்தையா தானே?” என்றார் ராஜநாயகம். வந்தது முதற்கொண்டு சாத்தையாவையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.நடன ஆசிரியர் அல்லவா? பாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/97&oldid=1311165" இலிருந்து மீள்விக்கப்பட்டது