பக்கம்:ஆடும் தீபம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது98

ஆடும்


கள். அல்லியை வாசலில் கண்டவுடனேயே, செந் தாமரையின் மனத்தில் நீறுபூத்திருந்த பழைய நட்புக் கனல் காற்றடிக்கப்பட்டு விலகிப் பிரகாசிக்க ஆரம்பித்திருந்தது. அவளுடன் தொடர்ந்த ஒர் ஆவலுடன் சாத்தையாவும் பேசி நட்புக் கொண்டாடிக் கொண்டு காரில் சென்றபோது, செந்தாமரையின் மூளை தீவிரமாக வேலை செய்யத் துவங்கிவிட்டது. பாம்பு கொத்தப்படம் விரிந்து விட்டது. விஷம் உடலில் பரவுமுன் நாம் போய்த் தடுக்க வேண்டும். தாமதம் செய்யக் கூடாது. அல்லி தன்னிடம் கொண்டிருந்த மாசற்ற அன்பிற்கு இதுதான் கைம்மாறு’ என்று முடிவு கட்டினாள் செந்தாமரை. படிப்பு வாசனை அதிகம் இல்லாத பாமரப் பெண்ணானாலும், பகுத்தறிவு அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது.

அல்லியின் பெயரைச் சொன்னவுடனேயே, அவர்களை ராஜநாயகம் மரியாதை கொடுத்து வரவேற்றார்,

சாத்தையாவைக் கண்டவுடன் செந்தாமரை படமெடுத் தாடும் நாகமென மாறிச் சீறினாள். அவள்முகம் சிவந்தது; உடல் துடித்தது. பாவி, இங்கேயும் ஏன் வந்தே?மாங்குடியில் உன் அட்டகாசங்களையும், அக்கிரமச்செயல்களையும் வச்சுக்கொண்டது போதாதா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டு, தெரியுமா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தாங்காதபோது, கையாலாகாதவன் புளுகு ஒரு பொழுது கூட நிலைக்காது தெரியுமா?’ என்றாள் அவள்.

வாத்தியார் ராஜநாயகம் கதைச் சுருக்கத்தை செந்தாமரையிடம் தெரிவித்தார்.

‘அருணாசலம் இவங்க பேச்சை எல்லாம் நீ கேக்காதே. அல்லிக்கு பரிஞ்சிபேச வருகிறவ, அல்லியைப்போல ஓடுகாலியாகத்தானே இருப்பா!’ என்று சாத்தையா