பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

111

இன்றைய உலகம் கேள்வி பதில் உலகமாக இருக்கிறது. பத்திரிகைகளிலே சினிமா, சினிமா நடிகர்களைப் பற்றிய கேள்வியும் பதிலும் நிறைந்திருக்கிறது. சில கேள்விகளுக்குப் பேனா மன்னனும், சில கேள்விகளுக்குப் பைங்கிளியும், இன்னும் சில கேள்விகளுக்குச் சட்டாம் பிள்ளையும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்துதானோ மணிவாசகரும் கேள்விபதில் முறையிலேயே திருச்சாழல் பதிகம் பாடியிருக்கிறார். சாழல் என்ன விளையாட்டு என்று தெரியவில்லை. அம்மானையைப்போல் இருந்திருக்க வேண்டும். இச்சாழல் பாடல்களுக்குப் பகைப் புலனாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஈழநாட்டிலிருந்து வந்த புத்தர்கள் சிலர், தில்லை வந்து தில்லைவாழ் அந்தணரை வாதுக் கழைத்திருக்கின்றனர். இறைவன் ஆணைப்படி, மணிவாசகரே அவர்கள் வாதத்திற்குப் பதில் சொல்ல வந்து நின்றிருக்கிறார்.

பெளத்தர்களோ வல் வழக்காட, மணிவாசகர் இறைவனை நினைந்திருக்கிறார், பெளத்தர்கள் எல்லாம் வாய் மூடி ஊமைகளாக நின்றிருக் கின்றனர். தில்லையை ஆண்ட மன்னன் மகள் ஒருத்தி ஊமையாக இருந்திருக்கிறாள். கடைசியில் இறை அருளால் அவளே வாய் திறந்து பேசி, பெளத்தர்களை எல்லாம் மடக்கியிருக்கிறாள். இந்த அற்புத நிகழ்ச்சிக்கு. ஓர் உருவம் கொடுத்தே மணிவாசகர் திருச்சாழலில் கேள்வி பதிலாகவே