பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122 ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

காரிலோ வண்டியிலோ ஏறிப் போரூர் செல்லலாம். பட்டீஸ் வரனையும், பச்சை நாயகியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். நாம் மாத்திரம் என்ன அன்று அந்த பெர்கடஸன்துரை ஆறாயிரம் மைல் கடல் கடந்தல்லவா இங்க வந்து இந்தச் சிற்ப உருவங்களைப் பார்த்திருக்கிறார்.

பார்த்ததோடு மட்டுமல்லாமல், போரூர் வெள்ளி மன்றத்துச் சிற்ப உருவங்கள், சிற்பக்கலை மலினதசை அடைந்த காலத்தில் உருவனவையல்ல, அக்கலை உச்ச நிலையில் உயர்ந்து விளங்கிய உன்னத காலத்தில் உருவானவையே என்று சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த எட்டுச்சிலைகளையும் போரூர் சென்று காண முடியாதவர்கள் இரண்டு உருவங்களை மட்டும் பார்த்தாவது மகிழட்டும் என்றுதான் இரண்டு அதி அற்புதமான சிலா உருவங்களின் படங்களை வெளியிட்டிருக்கிறோம். பிறவாயாக்கைப் பெரியோன் என்று சிவனை பாராட்டுகிறோம். அந்தப் பிறவாப் பெருமையுடைய இறைவனது இரண்டு மூர்த்தங்கள் இறவாப்புகழோடு இன்று இங்கே காட்சி கொடுக்கின்றன. போரூர் பிக்ஷாடன. மூர்த்தி வெகு அழகான உருவம். தாருகாவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மானுக்கும்; இறைவன் புல்லருத்துவது எவ்வளவு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மானும் எப்படி தலையைத்திருப்பிக் கொண்டு அந்தப் புல்லைக் கடிக்கத் துடிக்கிறது. அந்த ஒரு பகுதியிலேயே மனம் அப்படியே லயித்து விடுகிறது. அந்தச் சிலையைப் பார்க்கும் நமக்கு ஒரு வளைவொடு கூடிய வலதுகால், துவண்டு நிற்கும் அந்த இடை, கருணையோடு சாய்ந்-