பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

123

-திருக்கும் தலை எல்லாம். ஏதோ கவிதையில் காணுகின்றோமே, 'லளிதம்', அந்த 'லளிதம்' அந்த 'ரிதம்' என்பதை அல்லவா கல்லில் உருவாக்கி விடுகிறது. தலையணி, மார்பணி, இடையணி, காலணி எல்லாம் அழகுக்கு அழகு செய்கின்றன. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளும் இந்த ஆணழகனைக் கண்டுதானே நிறை யழிந்தார்கள்? அதுதானே அன்றையக் கதை!

இந்த மூர்த்திக்கு எதிர்த்திசையில் இருப்பவர் தாம் கஜசம்ஹாரமூர்த்தி. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய அந்த யானையைச் சங்கரித்து, அதன் தோலையே போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிற்கின்ற நிலையில் சிலை அமைந்துள்ளது. சங்கார மூர்த்தியின் காலடியில் உயிரிழந்த யானையின் தலை மிதிபடுகிறது. அந்தத் தும்பிக்கை, அந்த யானையின் அலறலோடு கூடிய வாய், ஒற்றைக் காலில் நின்று மற்றொருகாலைத்துக்கி மடித் திருக்கும் நிலையிலே ஒரு சுழற்சி; எட்டுக்கைகளாலும் அந்த யானைத் தோலை ஏதோ, 'பாராசூட்” விரிப்பது போல விரித்துப் போர்த்தியிருக்கும் நேர்த்தியெல்லாம் பார்த்துப் பார்த்து அனுபவிக்கத்தக்கவை. மனிதனைப் பிறவாமல் காக்கும் திறமுடையவன்தான் இறைவன். பிறவாத யாக்கையுடைய பெருமகன்தான் அவன். என்றாலும், அவனுக்கும் அவனுடைய மூர்த்தங்களுக்கும் இறவாப்புகழ் அளிக்க கூடியவன் மனிதனாகத்தான் இருந்திருக்கிறான். அந்த மனிதனையே, கலைஞன், சிற்பி என்கிறோம் நாம்.