பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 425

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

125

என்று கூறுயிருக்கிறார். உண்மை தான். எல்லோருக்கும் இரண்டு கண் என்றால் இந்தச் சிவபிரானுக்கு மட்டும் மூன்று கண். ஆனால் தன் இடப்பாகம் முழுவதையும் பார்வதிக்குப் பங்கிட்டுக் கொடுத்தபின்னர். மூன்றில் பாதிதானே அவருக்குச் சொந்தம். மூன்றில் பாதிஒன்றரை தானே? ஆதலால் சிவபெருமானை ஒன்றரைக் கண்ணன் என்று கூறுவதில் தவறு என்ன. அது சரியான கணக்காக அல்லவா இருக்கிறது.

பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானை எத்தனை எத்தனையோ பெயர் சொல்லி அழைக்கிறோம். எப்படி எப்படி எல்லாமோ வழிபடுகிறோம். அதிலெல்லாம் மாதிருக்கும் பாதியன். தோடுடைய செவியன், உமைபங்கன் என்று பாராட்டிப் போற்றுவதில் ஓர் உண்மையல்லவா பொதிந்து கிடக்கிறது. உலகத்திலே மக்களை யும், ஏன், எந்தப் பிராணி வர்க்கத்தையுமே எடுத்துக் கொண்டால் ஆணாகவும், பெண்ணாகவும் பார்க்கிறோமே யன்றி ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் காண்கிறதில்லையே என்ற சந்தேகம் தான் இன்றையப் பகுத்தறிவாளர்களின் உள்ளத்தில் எழுகிற கேள்வி.

ஆனால் இவர்கள் மறந்து விடுகிறார்கள் மனித உடம்பின் அமைப்பையும், மற்றும் பெளதிகங்களின் அமைப்பையும் பார்த்தால் அவை இருவேறு ஒட்டுகளாக அமையப் பெற்றிருக்கும்; ஒன்று தாய்த் தன்மை, மற்றொன்று தந்தைத் தன்மை. இரண்டும் ஒன்றித்தான் உலக வளர்ச்சி ஏற்படுகிறது.

மின்சாரம் என்பது ஒரு சக்தி என்று தெரியும். அங்கும் ஆண் பெண் என்றும் இரண்டு சக்திகள் உண்டு - பாலிடிவ், நெகடிவ் (Positive, Negative) என்று இரண்டும் ஒன்று சேர்ந்தால்தான் மின்சார ஓட்டமே ஏற்படும் மக்கள் உடம்பிலும்.