பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆடும் பெருமானும்

அளந்த நெடுமாலும்


ஒரு கண்ணாடிக் கடை. அக்கடையில் பெரிய நிலைக் கண்ணாடிகள். சிறிய கண்ணாடிகள், இன்னும் வண்ணப் பீங்கான் கோப்பைகள், எலக்டிரிக் ஷேவர். குளோப்புகள், சாலாந்தார்கள் எனப் பல கண்ணாடிச் சாமான்கள் விற்பனைக்காக அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கடையில் நான் நுழைகிறேன் ஒரு நாள். கடைக்குள் நடக்கும் போது எனக்கு ஒரே பயம். அப்படி இப்படிக் கையை வீசினால் எப்படி எப்படி எல்லாம் கண்ணாடிகள் உடைந்து சிதறுமோ என்றுதான்.

ஆதலால் மிக்க கவனத்தோடு அடிமேல் அடிவைத்து மெல்ல நடக்கின்றேன் நான். அப்போது ஒரு சிலம்ப வித்தைக்காரன் ஒருவனும் அக்கடைக்குள் நுழைகிறான். அவன் கையில் இரண்டு சிலம்பக் கம்புகள். அக்கம்புகளை வலசாரி இடசாரி சுற்றி அக்கடைக்குள்ளே தன் சிலம்ப வித்தையைக் காட்டுகிறான். கடைக்காரனோ கையை கையை நெறிக்கிறான்.

தப்பித் தவறி ஒரு சாமான் மீது கம்பு பட்டு விட்டால் எத்தனை சாமான்கள் தவிடு பொடியாக நொறுங்கிவிடும் என்று எண்ணுகிறான். பதறுகிறான். சிலம்ப வித்தைக் காரனோ மிகுந்த கெட்டிக்காரனாக இருக்கிறான். ஒரு