பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134 ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


பிள்ளையார் தானும் சிரித்தார். பெற்றோரையும் சிரிக்க வைத்தார். நம்மையும் சிரிக்கப் பண்ணுகிறார். ஆனால் இவரையே சிரிக்க அடித்தார்களே சில பெண்கள் அது தெரியுமா எப்படி என்று? சின்னஞ்சிறிய பெண்கள் சிலர் கூடி சிற்றில் கட்டி அதில் மண்ணால் சோறு, கறி முதலியன ஆக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வந்து சேருகிறார் பிள்ளையார். அவர் தோற்றம், அவர் நடந்து வரும் அழகு எல்லாவற்றையும் கண்டு சிறு பெண்கள் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விடுகிறார்கள்.

தன் உருவத்தைக் கண்டுதான் இந்தச் சிறு பெண்கள் சிரிக்கிறார்கள் என்று தெரிந்து விடுகிறது அவருக்கு. உடனே கோபமாகச் சென்று அவர்கள் கட்டியிருந்த சிறு வீட்டை எல்லாம் அழிக்கிறார் இவர். பெண்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்தச் சிறு பெண்களிலே ஒருத்தி, கொஞ்சம் துடியானவள், பயபக்தியுள்ளவள் போல் நடித்துக் கொண்டே பிள்ளையாரை நெருங்குகிறாள்.

'ஸ்வாமி' நாங்கள் சமையல் எல்லாம் செய்து முடித்து விட்டு, உடனிருந்து உண்பதற்கு விருந்தினர் ஒருவரும் இல்லையே என்று ஏங்கியிருந்தபோதுதான் தாங்கள் வந்தீர்கள். தங்களை விடச் சிறந்த அதிதி எங்களுக்குக் கிடைக்கவா போகிறது? தங்கள் வருகையால் ஏற்பட்ட அளவு கடந்த சந்தோஷத்தினால் சிரித்தோமேயல்லாமல், தங்களுடைய யானைத் தலையையாவது, அல்லது குட்டுக்குட்டென்ற கால்களால் 'தத்தக்கா புத்தக்கா' என்று தாங்கள் நடந்து வருவதைக் கண்டாவது நாங்கள் சிரிக்கவே இல்லை. அப்படியெல்லாம் சிரிப்போமா