பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

135

என்ன? விபரீதமாக நினைத்துக் கொள்ளதேயுங்கள். ஸ்வாமி” என்று வெகு நைலாகச் சொல்கிறாள்.

தாங்கள் சிரித்ததற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்ளும் போதே உண்மையிலே தாங்கள் எதற்காகச் சிரித்தார்கள் என்பதையும் அல்லவா சொல்லிவிடுகிறாள் அந்தச் சிறு பெண்.

{{block_center|

விருந்து விளிப்போம் எனக் கருதும்வேளை
அடிகேள்! இவண் நீயே
விரும்பி வந்தாய் என மகிழ்ச்சி
மீக் கூர்தலினால் செவ்வாயின்
முருந்து தோன்ற முறுவலித்தோம் அல்லால்
ஒரு நின் கரிமுகம் போல்
முகமும், பூதப் பெருவயிறும் முடங்கும்
குறள்தாள் நகு நடையும்,
இருந்தவாறு நோக்கி நகைத்திட்டேம்
அல்லேம்; இடந்தோறும்
இருக்கு முழங்கும் தேவாரத்திசையும்
துவன்றி ஓங்கவளம்
திருந்தும் கலசைச் செங்கழுநீர்ச்சிறுவா
சிற்றில் சிதையேலே!
தெள்ளத் தெளிந் தோர்க்கு அள்ளுறும்
செல்வா சிற்றில் சிதையேலே!

என்று செங்கழுநீர் விநாயகரைப் பார்த்து அந்தச் சிறு பெண் சொல்லித் தாங்கள் கட்டிய சிறு வீட்டைச் சிதைக்காதிருக்க வேண்டிக் கொள்கிறாள். வேண்டிக் கொள்வதாகச் சொல்கிறார், மாதவச் சிவஞான சுவாமிகள்.

பிள்ளையாரும் இந்த சாகசப் பேச்சில் ஏமாந்து சரிதான் என்று தலையை அசைத்து விடுகிறார். பெண்களும்