பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

சாமான் மீது கூட கம்பு படாமல் லாகவமாக கம்பைச் சுற்றிக் கால் மணி நேரம் விளையாடி விட்டு ஒய்கிறான். அதன் பின் கடைக்காரன், கடைக்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் எல்லாம் சிலம்ப வித்தைக்காரனைப் பாராட்டி பரிசுகள் கொடுத்து அனுப்புகிறார்கள். இது என்னையா கதை, இப்படி நடக்குமா என்று தானே எண்ணுகிறீர்கள். ஆம், அப்படி ஒன்றும் நடக்கவில்லைதான். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணித்தான் பாருங்களேன்.

நம் நில உலக வாழ்விலே இத்தகைய சிலம்பக்காரன் ஒருவனை நாம் கானாவிட்டாலும் கலை உலகிலே ஒன்றுக்கு இரண்டாக இரண்டு சிறந்த சிலம்பக்காரர்களை அல்லவா காண்கிறோம். அவர்களில் ஒருவன்தான் ஊர்த்துவ தாண்டவம் புரியும் அந்த நடன ராஜனாம் சிவபெருமான். மற்றவனோ ஓங்கி உலகளந்த உத்தமனாம் பரந்தாமன். இவர்களில் முன்னவனைப் பற்றித்தான் காரைககால அமமையாா,

            அடிபேரில் பாதாளம்
                  பேரும், அடியார்
            முடிபேரில் மாமுகடு
                  பேரும் தொடிகள்
            மறிந்தாடும் கை பேரில்
                  வான்தி சைகள் பேரும்
            அறிந்தாடும் ஆறு என் அரங்கு

என்று பாடுகிறார். இப்படி பாதாளம், மாமுகடு வான் திசைகள் எதுவும் பெயராமே, நீ அரங்கத்தில் அறிந்து ஆடக் கற்றிருக்கிறாயே அது எப்படிச் சாத்திய மாயிற்று, என்று வியர்த்து முக்கின் பேரில் விரலை வைத்து நிற்கிறார். இக்காரைக்கால் அம்மையைப் போலவே நம்மாழ்வாரும் மூவுலகும் ஈரடியால் அளந்து நிற்கும்