பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

147

இருப்பது போல் பின்னே இருப்பதில்லை. எப்படி எப்படி எல்லாமோ புதிய புதிய சுவையைத் தருகிறான். இதை யெல்லாம் அறியாதார் அறியாதார் தானே!

கம்பன் கவிதையில் உள்ளம் பறிகொடுக்க அறியா தார், அறியாதாரே. அவன் சொல்லும் பா நயத்தின் பண்பையெல்லாம் காவியத்தின் கட்டுக் கோப்பை யெல்லாம், அவன் சொல்லும் அரிய உண்மைகளை, பெரிய தத்துவங்களை யெல்லாம், அவன் கவிதை தரும் இனிமையை எல்லாம், எளிமையை யெல்லாம் அறியாதார், அறியாதாரே!