பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அனுபவம் ஒன்று, பாடல் இரண்டு

கவிஞன் ஒருவன் திருவரங்கத்துக்குச் செல்கிறான். அரங்கத்து அரவணையானைக் கண்டு தொழுகிறான். அங்குள்ள அழகிய மணவாளனின் அழகில் ஈடுபட்டு மெய் மறக்கிறான். தோள் கண்டார் தோளே கண்டார் . என்றபடி, அழகிய மணவாளனின் தோள்கள் விம்மிப் புடைத்து கம்பீரமாக இருக்கும் நிலையைக் காண்கிறான். இந்த அழகனின் தோள்கள் பெருமிதத்தோடு இப்படி உயர்ந்து காணப்படுவானேன்! என்று சிந்திக்கிறான்; காரணம் விளங்குகிறது, அவனுக்கு. அதைச் சொல்கிறான். அவன்

அருமறை துணிந்த பொருள்முடியை
இன்சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன
அரவணை விரும்பி அறிதுயில்
அமர்ந்த அணிதிரு அரங்கர் மணிதிகழ் முகுந்தர்
அழகிய மணவாளன் கொற்றப் புயங்களே!

உண்மைதான். "சடகோபரது பாடல்களைப் பெற்ற பெருமையில்தான் அவை பூரித்து உயர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை பெருமிதம், இத்தனை உயர்வு இந்தத் தோள்களுக்கு எங்கிருந்து வரும்" என்று தனக்குத் தானே விளக்கமும் கூறிக் கொள்கிறான் கவிஞன்.

கவிஞன் வேறு யாருமல்ல! அரங்கத்து அரவணை யானின் அற்புத அழகிலே தோய்ந்த தோய்ந்து, பக்தியால்