பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

149

பண் பட்டு கனிந்து நின்ற பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தான்! அவரது பாடலிலே அரவணையான் மீது அவருக் குள்ள பக்தியும் ஈடுபாடும் மட்டுமின்றி, சடகோபரது பாசுரங்களிலே அவருக்குள்ள பக்தியும் ஈடுபாடும் கூட விரவி நிற்கின்றன. எப்பேர்ப்பட்ட அனுபூதி நிலை!

இப்படி ஓர் அனுபவம். இந்தக் கவிதை பாடிய பிள்ளைப் பெருமாள் அய்யங்காருக்கு மட்டுமல்ல, இன்னுமொரு கவிஞனும் கிட்டத்தட்ட ஐயங்கார் பெற்ற அனுபவத்தையே பெற்றிருக்கிறான். அவன் நினைக்கிறான், "இந்தப் பரந்தாமன் எங்கேயோ தொலை தூரத்தில் உள்ள பாற்கடலில் படுத்துக் கிடக்கிறான். ஆனாலும், அந்த அநாமதேயப் பேர்வழிக்கு வந்த யோகத்தைப் பார்த்தீர்களா! சாக்ஷாத் திருமகள் பக்கத்திலேயே இருந்து பணிவிடை செய்கிறாள். ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றுமில்லாத இவனுக்கு ஆயிரம் ஆயிரம் பெயர்கள்.

தலையில் அணிவதற்கு கிரீடங்கள்தான் எத்தனை எத்தனை! சூடுவதற்குத் துளவ மாலைகள்தான் எத்தனை, எத்தனை ஆயிரத்துக்கு மேலேயே இருக்கும் போலிருக்கிறதே! இதெல்லாம்தான் போகட்டும் இந்தக் குருகூர் சடகோபன் வேறே அல்லவா, இருக்கின்ற துளவமாலைகள் போதாதென்று, அமுதம் அமுதமான கவிமாலைகள் காத்தியிருக்கிறான்.

அதுவும் ஒன்றா இரண்டா? ஆயிரம் பாமாலைகளால் அல்லவா அரங்கத்து அழகனை அலங்கரித்திருக்கிறான்! இந்த யோகம் என்ன சாமான்யப்பட்டதா! பெரிய சகடயோகமாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது!" என்றெல்லாம் வியந்து, ஒரேயடியாய் அதிசயப்பட்டுப் போய் நிற்கிறான். "எப்படி வந்தது இப்படி ஒரு யோகம்