பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



152

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

1944ம் வருஷம், ஆம் கிட்டத் தட்ட இருபது வருஷங்களுக்கு முன், நான் திருநெல்வேலியில் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டாக வேலை பார்த்தேன். அப்படி வேலை பார்க்கும்போது எத்தனை எத்தனையோ கேஸ்களை விசாரிக்கவும் அவைகளில் தீர்ப்புக் கூறவும் செய்தேன்.

நான் மாஜிஸ்ட்ரேட்டாக வேலை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரே பயம். காரணம் திறமையாகத் தீர்ப்பு எழுதத் தெரியாது என்பதினால் அல்ல. அப்படித் தீர்ப்பு எழுதும்போது குற்றம் செய்த ஒரு சிலர் சாட்சியம் இல்லாததினால் தப்பித்துக் கொண்டு செல்வதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் குற்றம் செய்யாத ஒருவன் என் தீர்ப்பினால் தண்டிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதுதான் என் பயத்துக்கெல்லாம் காரணம்.

ஆதலால் எல்லாப் பாரத்தையும் இறைவன் பேரிலேயே போட்டு விட்டுத்தான் தீர்ப்பு எழுதுவேன். இருபதுவருஷம் கழிந்த பின்னரும், இன்றும் என் இதயத்தில் கை வைத்துக் கொண்டு சொல்கிறேன், பொன்னுக்கோ பொருளுக்கோ அடிமையாகி, இல்லை அன்பர்களது சிபார்சுகளுக்கோ முக்கியத்துவம் கொடுத்து நான் தீர்ப்பு எழுதியதில்லை. இன்னும் ஒரு நிறைவு என்ன வென்றால், குற்றம் செய்யாதவர்களை, அப்படி அவர்கள் அக்குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள் என்று ஒரு சிறு சந்தேகம் தோன்றிவிட்டால் கூட அவர்களைத் தண்டித்ததில்லை.

இப்படி எல்லாம் பயபக்தியோடு வேலை பார்த்த எனக்கு ஒரு வழக்கில் சோதனை ஒன்று வந்தது. திருநெல்வேலி ஜில்லாவில் ஜாதி வெறி அதிகம். திருநெல்வேலி வேளாளர்கள் மற்ற சமூகத்தினரைத் தாழ்வாகவே நடத்துவர். ஓர் ஒதுக்குப் புறமான கிராமத்-