பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

என்று பேச்சாளர் கேள்வி கேட்டார். கேட்டவர்கள் அத்தனை பேரும் வாயடைத்துப் போய் உட்கார்ந் திருந்தார்கள். கேள்விக்கு விடை, 'இல்லை, ஐயா, இல்லை' என்று சொல்வதுபோல கூட்டத்தார் கரகோஷம் வேறு செய்தார்கள்.

இத்தனையையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டுமிருந்த எனக்கோ வீடு திரும்பும்போது உள்ளம் ஒரு நிலையில் இல்லை.

'என்ன! இந்த நண்பர்கள் பேசுகின்ற பேச்சிலும் கேட்கின்ற கேள்விகளிலும் ஒரு வேகம் இருக்கத்தானே செய்கிறது. கொஞ்சம் உண்மையுங்கூட இருக்கிறதே! இதற்கெல்லாம் தக்க விடை சொல்வார் கிடையாதா” என்று சிந்தித்துக் கொண்டே திரும்பினேன்.

அந்தச் சமயத்தில் ஒருவர், ஒரு பெரியவர், எனக்கு முன்னமேயே அறிமுகம் ஆனவர்தான் - என்னை அடுத்துவந்தார். 'என்ன தம்பி! எப்போதுமே உற்சாகமாக இருக்கும் உமக்கு இன்றைக்கு ஏன் இத்தனை சோர்வு' என்று கேட்டார். நான் என்னுடைய நிலையை விளக்கினேன். கூட்டத்தில் அன்பர் கேட்ட கேள்வி களையும் அடுக்கினேன். 'இன்றைய உலகத்தில் எழு கின்ற பிரச்சனைகள் எத்தனை எத்தனையோ உண்டே, அவைகள் எல்லாம் தீராத புதிர்கள் தானா? இல்லை எல்லாவற்றிற்கும் விடை கண்டுவிட முடியுமா? கூறிவிட முடியுமா?' என்று கேட்டேன். 'என்ன இதுதானா பிரமாதம்' என்று பேசத் துவக்கினார் பெரியவர்.

"ஆம்! தம்பி. இந்த கடவுளைக் கண்ணால் காண்ப தற்குத் தான் எத்தனைபேர் எப்படி எப்படி எல்லாம் முயன்றிருக்கிறார்கள். வேதங்களை ஒதியிருக்கிறார்கள். யாகங்களைச் செய்திருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடி-