பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

161

யிருக்கிறார்கள். காவி உடை உடுத்தியிருக்கிறார்கள். மொட்டை அடித்திருக்கிறார்கள். தாடியை வளர்த்திருக்கிறார்கள். தவம் பண்ணியிருக்கிறார்கள். நோன்பு நோற்றிருக்கிறார்கள். இப்படியெல்லாம் இவர்கள் செய்தும், இந்தப் பொல்லாத கடவுள், அவ்வளவு லேசாக காட்சி கொடுக்கிறவனாக இல்லையே.

அப்படி அவன் காட்சி கொடுக்க மறுக்கிறபோது, தயங்குகிறபோது, அப்படி ஒருவன் இருக்கவா போகி றான் என்ற சந்தேகமே எழுவது இயற்கைதானே. இப்படி முதலுக்கே மோசம் என்று வருகிறபோது, அவன் வடிவத்தைப்பற்றி, உருவத்தைப்பற்றி, வண்ணத்தைப் பற்றி என்ன என்று சொல்ல? மைப்படிந்த கண்ணாள் பாகன், கச்சி மயானத்தான் ஊரான், வார்சடையான் என்றெல்லாம் அவனைச் சொன்னால் அவையெல்லாம் உண்மையாகிவிடுமா என்ன? கடவுள் என்றாலே எல்லாம் கடந்து நிற்பவன் அல்லவா? அவன் ஒர் ஒப்புடையவன் அல்லன். ஒருவன் என்றுகூட இல்லை. ஓர் ஊரான் என்றாவது சொல்ல முடியுமா? இல்லை, இப்படி இருப்பான் என்று ஒர் உவமையாவது காட்ட முடியுமா? முடியாதுதானே! இப்படி இருப்பான் அவன், இந்த நிறத்தவன் அவன், இந்த வண்ணத்தவன் அவன் என்றெல்லாம் அவனைச் சொல்லிலோ, கல்லிலோ, சித்திரத்திலோ, சிலையிலோ எழுதிக் காட்டிவிட முடியாது தானே!' என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார் பெரியவர்.

எனக்கோ பெரியவர் பேரிலேயே சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. இவரும் ஆற்றங்கரை பேச்சாளர் பரம்பரை தானோ? என்று எண்ணினேன். அதற்குள் அவர் கையமர்த்தி, 'தம்பி இறைவன் அப்படி இருப்பான், அந்நிறமுடையவனாய் இருப்பான், அவ்வண்ணமுடையவ-