பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

15

இதைப் போலவே மூன்றுலகையும் ஆண்ட மன்னன் மகாபலிக்கு அருள் செய்ய, பரந்தாமன் வாமன வடிவில் அவன் முன் வந்து மூன்றடி மண்ணை யாசித்துப் பெற்று, பின்னர் ஒங்கி உயர்ந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து ஒரு அடியினாலே இந்த நில உலகம் முழுவதையும் அளந்து, மற்றொரு அடியினாலே வான் முழுவதையும் அளந்து, அதன் பின் மூன்றாவது அடியை மாவலியின் தலை மேல் பொருத்தி அவனுக்கு முத்தியை அருளினான் என்பர். இக்கோணத்தில் உறைபவனையே

            அங்கை பால் ஆடிமூன்று
                  நீர் ஒற்றி அயன் அலர் கொடு
            தொழுது ஏத்த
                  கங்கை போதாக் கால்
            நிமிர்ந்து அருளிய கண்ணார்

என்று மங்கை மன்னன் தனது பெரியதிரு மொழியில் பாடுகிறார். இப்படி ஆடியவன் சேவடியையும் அவர்தன் திருவடிவையும் நான் எத்தனை எத்தனையோ கோயில்களில் கண்டு வணங்கியிருக்கிறேன். தில்லையிலே, திருப் பனந்தாளிலே, செங்காட்டாங் குடியிலே, திருவாலங் காட்டிலே, தென்காசியிலே, மதுரையிலே, பேரூரிலே எல்லாம் இவ்வூர்த்துவ தாண்டவ வடிவங்கள் கல்லிலோ அல்லது செம்பிலோ சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. அவ்வடிவங்களின் அடி ஒற்றியே சேலத்தை அடுத்த தார மங்கலம் கைலாசநாதர் கோயிலிலும், ஒரு வடிவம் உருவாகி இருக்கிறது. அதனையே பார்க்கிறீர்கள் பக்கத்திலே. இதைப் போலவே, ஓங்கி உலகளந்தவனையுமே அளந்து கல்லில் அமைத்து வைத்திருக்கிறார்கள். அழகர் கோயிலிலே, பூரீ வில்லிபுத்துரிலே எல்லாம். திருக்கோயிலூரிலோ அவனே மூல மூர்த்தியாக உருப் பெற்றிருக்கிறான். இன்னும் கோவையை அடுத்த சிங்கா