பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

நல்லூரிலே ஒரு சிறிய கோயிலிலே செப்புச் சிலையாகவும், அவன் நிற்கிறான். அவன் கோலத்தையுமே பார்க்கிறீர்கள் பக்கத்திலே.

இந்த வடிவங்களை நான் சிற்பக்கலை உலகில் கண்ட போது இதன் காலத்தைக் கணக்கிட முயன்றேன். பல்லவர் கோயில்களிலே இவ்வடிவங்களை காணோமே. ஆதலால் சோழ மன்னர் காலத்திலேயும், அதன் பின்னர் வந்த நாயக்க மன்னர் காலத்திலும்தான் இந்த நடனக் கோலம் உருப் பெற்றிருக்குமோ என்று எண்ணினேன். எனது வட நாட்டு யாத்திரையில் அப்படி எண்ணியது தவறு என்று கண்டேன்.

1913-ஆம் ஆண்டிலே தகூடிசீலத்திலே புதை பொருள் ஆராய்ச்சியாளர் வேலை செய்த போது பீல்மவுண்டு என்னும் இடத்திலே ஒரு சதுரமான கல் ஒன்றைக் அகழ்ந்து எடுத்திருக்கின்றனர். அக்கல்லில் பலவித சிற்ப வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு வடிவம் ஒருகாலை ஊன்றி ஒரு காலை உயர்த்தியிருக்கின்ற நிலையில் இருப்பதை சிற்பக் கலை ஆராய்ச்சியாளரான கங்கோலி கண்டு பிடித்திருக்கிறார். அக்கல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மெளரிய அரசர்கள் காலத்தியது என்றும் அறுதியிட்டு வைக்கிறார். இன்னும் இந்த வடிவமே பரத சாஸ்திரத்தில் சொல்லப்படும் லதா திலகம் என்னும் வடிவம் என்றும் முடிவு கட்டுகிறார். இந்த லதாதிலகம் தாண்டவ லக்ஷணங்களில் ஒரு கரணம் என்பதைப் பரதம் கற்றவர்கள் அறிவார்கள். லதாதிலகம் என்றால் பாத நாட்டியம் ஆடும் போதே ஒரு காலை உயர்த்தி நெற்றியில் பொட்டிட்டுக் கொள்ளும் சாகலம் என்று தெரிகிற போது நமக்கு ஒரு ஆதங்கம் தோன்றும். இந்த சாகஸ்த்தை, அன்று தில்லையில் ஆடிய