பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

அழிக்கின்ற பரம் பொருளுக்கு வடிவம் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள், இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக்காட்ட ஒண்ணாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் அந்த இறைவன் எல்லா இடத்தும் பரவி இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் பார்க்கும் மரங்களில் எல்லாம் அவன் பசிய வடி வினைக் கண்டிருக்கிறார்கள். காக்கை சிறகினிலே, அவன் கரிய நிறத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். கேட்கும் ஒலியில் எல்லாம் அவன் கீதத்தைக் கேட்கிறார்கள். ஏன், எரிகின்ற தீயில் விரலை விட்ட போது கூட அவனைத் தீண்டும் இன்பத்தையே அல்லவா பெற்றிருக்கிறார்கள். இப்படி எங்கும் நிறைந்த இறைவனைத் தான் மலையில் கண்டிருக்கிறார்கள். மரத்தில் பார்த்திருக்கிறார்கள். ஏன் பறக்கும் பறவையாகவும், பாயும் விலங்காகவுமே அவனை உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

இதை எல்லாம் உணர்ந்த, அறிஞர் பெர்னாட்ஷாவும், இந்த இந்தியர்கள் பொல்லாதவர்கள், பறவைகளையும் விலங்கினங்களையுமே தாங்கள் வழிபடும் மூர்த்திகளாக அமைத்துக் கொண்டு வணங்கத் தெரிந்திருக்கிறார்களே என்று அதிசயித்திருக்கிறார்.

சாதாரணமாக நாம் சொல்வோம். எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்தவனாக தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று. சொல்லும் போது துண் என்பது ஒன்று, துரும்பு என்பது ஒன்று, இறைவன் என்பது வேறு ஒன்று. அது வந்து தூணில் புகுந்து கொண்டிருக்கிறது. துரும்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தானே எண்ணத் தோன்றும். ஏன் அந்த துனே இறைவன், அந்தத் துரும்பே இறைவன் என்று எண்ணு