பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

21

தல் கூடாது என்று நமக்கு கேட்கத் தோன்றும் அல்லவா. இப்படிக் கேட்பவர்களை நினைந்தே அருள் அரசராகிய அப்பர் பெருமான்.

            நின்னாவார் பிறர் இன்றி
                  நீயே ஆனாய்
            நினைப்பவர்கள் மனத்துக்கோர்
                  வித்தும் ஆளாய்

என்று பாடத்துவங்கியவர். அவன் எப்படி எல்லாம் உருப் பெறுகிறான் என்ற சொல்ல முடியாமல் திணறித் திணறி:

            பொன்னானாய் மணியானாய்
                  போகம் ஆனாய்
            பூமிமேல் புகழ்த்தக்க பொருளே உன்னை
                  என்னானாய் என்னானாய்
            என்னின் அல்லால்
                  ஏழையேன் என் சொல்லி ஏத்து கேனே

என்றும் மயங்கி நிற்கிறார். அப்பர் போன்ற பெரு மக்களே இப்படித் திக்கித் திணறும் போது நம் நாட்டுக் கலைஞர்கள் மட்டும் எங்கும் நிறைந்த இறைவனைப் பறவை உருவிலே காணுகிறார்கள். விலங்கினமாகவுமே மதிக்கிறார்கள். பறவையையும் விலங்கினத்தையும் பரமன் உருவிலே அமைத்து அந்த உருவங்களை மனிதன் விழுந்து விழுந்து வணங்கவும் வகை செய்திருக்கிறார்கள். கலைகளில் எல்லாம் சிறந்த சிற்பக் கலை உலகிலே, இந்தப் பறவையும் விலங்கும். எப்படிப் பரமன் உருவிலே காட்சி தருகிறது என்பதை ஒரு சில உதாரணங் களால் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தெய்வ வடிவங்களில் எல்லாம் எல்லோருக்கும் முன்னவனாய் முன் நிற்பவர் யார் என்பது நமக்குத் தெரியும். அவரே யானை வடிவினர். ஐந்து கரத்தவன்,