பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

ஆனை முகத்தான், இந்தின் இளம் பிறை போலும் எயிற்றன், என்று அன்றே திருமூலரால் பாராட்டப் பட்டவர். மக்கள் மாக்களுடனே உருவத்தாலும் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்து விளங்கும் யானைக்கே தெய்வ வடிவில் முதலிடம் கொடுத்தது பொருத்தம் தானே. நூற்றி இருபது வயது வரை வாழக் கூடிய விலங்கு அது. எவ்வளவோ வலியுடையதாக இருந்தாலும் ஒரு கட்டுக்குள் அடங்கி நிற்கும் இயல்பும் உடையது. விரிந்த மனத்திற்கும் நிறைந்த அறிவிற்கும் உருவம் கொடுத்து கடவுளை உருவாக்க எண்ணிய கலைஞன், யானையின் வடிவிலேயே அதனை கற்பித்திருக்கிறார். அந்தக் கடவுளையே,

            பாசத்தளை அறுத்துப்
                  பாவக் கடல் கலக்கி
            நேசத்தளை பட்டு
                  நிற்குமே - மாசற்ற
            காரார் வரை ஈன்ற
                  கன்னிப்பிடி அளித்த
            ஓரானை வந்தென்
                  உள்தது

என்று குமரகுருபர அடிகள் பாடி மகிழ்கிறார்.

இந்த அண்ணனுக்கு ஏற்ற தம்பியோ அறுமாமுகவனாக அமைகிறான். அவன் மனித உருவினனே என்றாலும், அவனை எல்லா இடத்திலேயே இட்டுச் செல்லும் ஆற்றல் பெற்றது மயில் தான். விரிந்து பரந்த ஆகாயத்தையே மயிலென உருவகித்து, அதில் தோன்றும் செஞ்சுடராகவே முருகனை உருவகித்திருக்கிறார்கள். கலைஞர்கள் அவனை மயில் வீரன் என்றே வர்ணித்திருக்கிறார்கள். முருகனையும் விட அவன் ஏறி வரும் மயிலும் அவன் ஏந்தி நிற்கும் வேலுமே தொழுதற்குரியது என்றும்