பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

வழிபடுகிற மக்கள், கடவுளான பரந்தாமனையே ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய வடிவங்களிலே பலபல கோலங்களில் காண்கிறார்கள். பெருமான் எடுத்த திரு அவதாரம் பத்து என்பதை அறிவோம். அந்த பத்தும் உலகப் பரிணாமத்தை விளக்க. எடுத்தவை என்பதையுமே உணர்வோம். உலகப் பரிணாமத்தைப் பற்றிப் பேசும் போது ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து தண்ணிரும் தண்ணிலிருந்து மண்ணும் வந்தது என்பர். உலகம் முழுவதுமே முதலில் தண்ணிராகத் தான் இருந்திருக்கிறது. அந்த தண்ணிரிடையே மண் தோன்றி பின்னரே மண் உருப்பெற்றது என்றும் கூறுவர். உயிரினங்கள் இந்த முறையிலேதான் வளர்ந் திருக்க வேண்டும். ஆதலால்தான் ஆதியில் தோன்றிய உயிர் மீனாக, ஆம் நீரில் மட்டுமே வாழ்கின்ற உயிராக இருந் திருக்கிறது. அதன் பிறகுதான் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிராகிய ஆமை = கூர்மம் தோன்றியிருக்கிறது.

அதன் பின்னரே நிலத்திலே தங்கியிருந்து அதை குத்திக் கிளறி பயிர் விளைக்கும் உயிராகிய வராகம் தோன்றியிருக்கிறது. பின்னரே மிருகம் பாதியாகவும் மனிதன் பாதியாகவும் உருவாகிய நரசிம்மம் வெளி வந்திருக்கிறது. அதன் பின்தான் வளர்ச்சியில்லாத மனிதனாக. வாமனன் தோன்றியிருக்கிறான். இதற்கும் அப்பால் தான் பூரண வளர்ச்சி பெற்ற மனிதனான ராமன் பிறந்திருக்கிறான். ராமனுக்கும் பின்னரே கண்ணன் தோன்றியிருக்கிறான், என்றெல்லாம் சொல்லுகிறார்கள் அறிஞர்கள். மீனாக, ஆமையாக, கூர்மமாக, வராகமாக உருவெடுத்தவனுக்கு தெய்வத்திரு உருவங்கள் அமைத்து வணங்க நாமும் மறக்கவில்லை. இவர்களில் இருவரையே இங்கு காண்கிறீர்கள். பூரீ முஷ்ணத்திலே பூவாரகன் கோயில் கொள்கிறார் என்றால், நாமக்கல்லில் நரசிம்மர் பிரதான மூர்த்தியாக விளங்குகிறார். இவர்கள் எல்லாம் நமக்கு நீண்ட காலமாக அறிமுகமானவர்கள்.