பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழி காட்டும் விநாயகர்

கம்பன் பிறந்த தேரழுந்துாரில் ஒரு சிறப்பு. வேதபுரி ஈஸ்வரனான சிவனும் ஆமருவியப்பன் என்னும் விஷ்ணுவும் எதிர் எதிரே கோயில் அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிவன் மேற்கே பார்க்க இருந்தால் விஷ்ணு கிழக்கே பார்க்க நிற்கிறார். இருவருக்கும் சந்நிதி வீதி ஒன்று தான். அத்தனை சமரச மனோபாவம் இருவருக்கும். இந்தத் தலத்திற்கு ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். அவரது தல யாத்திரையில் அவர் வந்த வழி இரண்டு பெரிய கோயிலுக்கும் மத்திய பாகமான இடம். அங்கிருந்து கிழக்கே திரும்பினால் ஒரு கோபுரம் காணப் படுகிறது.

எந்தக் கோயில், தனி வழிபடு தெய்வமான வேதபுரி ஈஸ்வரர் கோயில் என்று அறியக்கூடவில்லை. இந்த நிலையில் அங்குள்ள தேரடியில் ஒரு சிறு பிள்ளையார் இருந்திருக்கிறார். அவர் தன் கை தூக்கி வேதபுரி ஈஸ்வரன் கோயிலுக்கு வழி காட்டியிருக்கிறார். அதன் பின் சிரமம் இல்லாமல் சம்பந்தர் கிழக்கு நோக்கி நடந்து சிவன் கோயில் சென்றிருக்கிறார். வேதபுரியானைப் பாடிப்பரவி இருக்கிறார். அன்றிலிருந்து அந்த தேரடிப் பிள்ளை யாருக்கு வழிகாட்டி விநாயகர் என்ற பெயர் நிலைத் திருக்கிறது.

உண்மைதானே. வாழ்க்கையில் பாதை தெரியாமல் துயர் உறுகிறவர்கள் தான் எத்தனை எத்தனை பேர். அத்தனை பேருக்கும் வழிகாட்டியாக அமைவதற்கு ஒரு