பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

29

அளப்பரும் சாந்தமும் உடையது யானை. இதம் செய்வார்க்கு வசமாய் உதவுவதிலும் யானையை விடச் சிறந்த உயிரே இல்லை என்பது அறிஞர் துணிபு ஆதலால் அருங்குனங்கள் பல அமைந்த யானையின் தலையுடன் ஒரு கடவுளை உருவாக்கிய கலைஞன் பாராட்டுவதற்கு உரியவன் தானே. -

முடிவும் அறிவும், அதாவது சித்தியும், புத்தியும் விநாயகருக்குத் திருவடிகள் - இல்லை - திருவடி வருடும் தர்மபத்தினிகள் ஆகின்றார்கள், தாழ்செவி, சர்வ சக்தியையும், ஏகதந்தம் பரஞானத்தையும், ஒடிந்த தந்தம் அபயத்தையும், லம்போதரம் பொறுமையையும் அறிவிக் கும் அடையாளங்களாக அமைகின்றன. எல்லாவற்றினுக் கும் மேலாக உலகம் தோன்றுவதற்கு மூலகாரணமாம், 'ஓம்' என்னும் பிரண்வ உருவத்திலேயே தெய்வத் திரு உரு அமைகிறது. அதன் மூலம் அந்தத் திரு உருவே அறிவுக்கு அறிவாகவும், எங்கும் வியாபித்து நிற்கும் பரம்பொருளாகவும், யாவராலும் அறியப்படாத நிலையிலேயும் எல்லோராலும் வணங்கப்படும் இயல் புடையதாகவும், இறைவனுடைய தன்மைகள் எல்லாம் நிறைந்து நின்று மக்களுக்கு அருள் செய்யும் திருக் கோலமாகவும் அமைந்து விடுகிறது.

விநாயகர் வணக்கம் நீண்ட நாளாகவே தமிழ் நாட்டில் நிலைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல; எந்தத் தெய்வ வழி பாடும் விநாயக வணக்கத்தை முதன்மையாக வைத்தே நடந்து வருகிறது. விநாயகரை வணங்காமல் ஆரம்பித்த காரியங்கள் முட்டின்றி நிறைவேறுவதில்லை. நிரம்பச் சொல்வானேன். திரிபுரம் எரிக்கப்புறப்பட்ட சிவபிரான் விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். அவ்வளவுதான், தேரின் அச்சு முறித்து விட்டது. விநாயக