பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்ப வடிவில் ஒரு புதிர்

பத்து வருஷங்களுக்கு முன் நான் தஞ்சையில் இருந்தேன். அப்போது என்னுடன் இணை பிரியாது இந்தவர்கள் இரண்டு நண்பர்கள் (ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது அல்லவா.). நான் தஞ்சைக் கலைக் கூடம் அமைக்கும் போது கூடவே இருந்து, நான் தேடி எடுத்து வரும் சிற்பங்களின் அழகை எல்லாம் அனுபவிப்பார்கள். நான் சொல்லும் விளக்கங்களை கேட்டு மெய் மறப்பார்கள். நானும் இவர்களை தஞ்சை மாவட்டத்தில் பல பாகங்களுக்கும் கூட்டிச் செல்வேன். பல கோயில்களுக்கும் செல்வோம். அங்கு இருக்கும் சிற்பங்களின் அழகை எல்லாம் கண்டுகளிப்போம்.

இப்படி கலை அனுபவத்தில் ஒரு நாள் நாங்கள் மூவரும் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ் வரர் கோயிலுக்குப் போனோம். அக்கோயில் இரண்டாம் ராஜ ராஜன் கட்டியது. அங்குள்ள ராஜகம்பீர மண்டபத் தில் எண்ணிறந்த சிற்பவடிவங்கள் இருக்கின்றன என்றெல் லாம் அவர்களுக்குச் சொல்லியிருந்தேன். சரியென்று கோயிலுள் நுழைந்து ராஜ கம்பீர மண்டபத்துக்கு இட்டுச் செல்லும் படிக் கட்டுகளை நோக்கி நடந்த போது கிழக்கே பார்த்த கோஷ்டத்தில் ஒரு சிலை, மூன்று முகம், எட்டுத் திருக்கரங்களோடு இருந்தது.

அத்துடன் அவ்வடிவின் பாதிப்பாகம் பெண் வடிவு என்று காட்டத் தக்க வகையில் விம்மிப் பெருத்த ஒரே மார்பகம். இடுப்பிற்கு கீழே மடி மடியாய்த் தொகுத்துக்