பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

45

மூவர்கற்கும் முதற் பொருளாய்
முத்தொழிலுக்கும் வித்தாகி,
நாவிற்கும் மனத்திற்கும்
நாடறிய பேரறிவாய்
தேவர்களும் முனிவர்களும்
சித்தர்களும் நாகர்களும்
யாவர்க்கும் தாயாகும்
எழிற் பரையை வணங்குவாம்

என்ற பாடலைப் படித்த உடனே விஷயம் விளங்க ஆரம்பித்தது.

கற்பனைத்திறன் மிகுந்த சிற்பி ஒருவன், திரி மூர்த்தி வடிவம் ஒன்றை வடிக்க திட்டமிட்டு வேலையை ஆரம்பித்திருக்கிறான், வடிவத்தைச் செதுக்கும் போது முன்னோக்கியிருந்த ஒரு முகத்தில் பெண்மையின் சாயல் எப்படியோ அமைத்துவிட்டதை உணர்ந்திருக்கிறான். சரி அவ்வடிவத்தைப் பராசக்தியின் வடிவமாகவே அமைத்து விடுவோமே என்று எண்ணியிருக்கிறான். இன்னும் அவனது சிந்தனை விரிவடைந்திருக்கிறது. திரிமூர்த்திகளும் திரிமூர்த்தியர் துணைவியர் பராசக்தி எல்லோரும் இணைந்து நிற்கும் ஒரு விசுவரூபக் காட்சியாகவே ஆக்கினால் என்ன என்று எண்ணிருக்கிறான். அதற்கு என்ன செய்வது. இறைவனும் இறைவியும் இணைந்து நிற்கும் அர்த்தநாரீஸ்வர மூர்த்தத்தையும் இந்த வடிவில் இணைத்து விட்டால் தன் எண்ணம் பூர்த்தியாகும் என்று சிந்தித்திருக்கிறான்.

இப்படித்தான் இந்த விசுவரூபம் உருப் பெற்றிருக்க வேணும். கடைசியில் கலைஞன் எண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்த விஸ்வரூபக் காட்சியே இது என்று தீர்மானத்திற்கு வந்தேன். இது தான் முடிந்த முடிவு என்று