பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

ணக்கம். 'ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்' என்று இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்த நூலின் ஆசிரியர், திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். கம்பனைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்லால் இழைத்த காவியங்களான கோயில்களைப் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்களைப் படித்து இன்பம் அடைந்தவர்கள் தமிழர்கள். 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொகுப்புக்களின் மூலமாகவும், வேங்கடத்துக்கு அப்பால் என்ற வடநாட்டுத் தலங்கள் பற்றிய நூல் மூலமாகவும் அவரை இனம் கண்டு வைத்திருக்கிறார்கள் பக்தர்கள், ஆன்மிகச் செல்வர்கள், கலாரசிகர்கள். ஆகவே அவர்களுக்கு, எங்கள் தந்தையார், திரு. பாஸ்கரத் தொண்டைமானைப் பற்றிப் புதிதாக எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை -

'ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும், அவ்வப்போது அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் தாம், என்றாலும் அவர்கள் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னர் தான் நூல் வடிவம் பெறுகின்றது. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் நான் ஏற்கெனவே படித்தவைதாம். படித்து இன்புற்றவைதாம் - என்றாலும் அச்சுக்குக் கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் அவற்றை நான் படித்தபோது அத்தனையும் எனக்குப் புதிய கட்டுரைகள் போலவே இனிப்பாய் இருந்தன. நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார்களே, அப்படி இருந்தது. ஆடும் பெருமானையும், அளந்த நெடுமாலையும் எத்தனை கோயில்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த இரண்டு திருமூர்த்தங்களுக்குமிடையே இப்படி ஓர் அபூர்வமான, அற்புதமான ஒற்றுமை இருப்பதை எண்ணிப் பார்க்கத்