பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

49

இந்த உருவமில்லாத காதற் கடவுளை உருவாக்குகிறான், தமிழ் நாட்டில் சிற்பி ஒருவன். ஒரே குதிரையும் ஒரே சக்கரமும் பூட்டிய கல் தேர் ஒன்று. அந்தத் தேர்த் தட்டில் அற்புத அழகோடு கூடிய தன் காதலி ரதியையும் அணைத்துக் கொண்டு கரும்பு வில்லையும் ஏந்திக் கொண்டு புறப்படுகிறான். போர்க்கோலத்தில் இப்படி ஒரு சிலை இன்று தஞ்சைக் கலைக் கூடத்தில் இருக்கிறது. அதைத்தான் பார்க்கிறீர்கள் படத்திலே பார்க்கிறீர்கள் படத்திலே - இந்தச் சிலா உருவைக் கண்ட ஒரு கவிஞன்.

காதற் கடவுள் காமனுமே
காதலி ரதியுடன் தேர் ஏறி
காதலை வளர்க்க விரைகின்றான்

என்று பாட ஆரம்பித்தவன் கடைசியில், இனி வேதனை உறுபவர் எத்தனையோ என்று முடிக்கிறான். ஆரம்பத்தில் வேதனைப்பட்டுத் தானே பின்னால் இன்பம் காண முடியும். அதுதானே காதல் தத்துவம்.

மேலும் இந்தச் சிலை உருவில் காமனையும் ரதியையும் ஒன்றாக இணைத்திருப்பது ஓர் அற்புதமான உண்மையை விளக்குகிறது. இரண்டு இதயங்கள் சேராத இடத்து காதல் இல்லை. மன்மதன் இல்லாமல் ரதி இல்லை. ரதி இல்லாமல் மன்மதன் இல்லை. இருவரும் பிரிந்து நின்றால் காதலே இல்லை. இணைந்து நின்றால் காதல் மட்டும் தானா எல்லாம் உண்டுதான். காதலின்

ஆ.பெ.அ.தெ-4