பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

தத்துவத்தை அற்புதமான ஒரு ஆங்கிலப் பாடலில் வெளியிடுகிறான் - காதல் கவிஞன் - ஷெல்லி. அந்த ஆங்கிலக் கவிதை மலரை தமிழ் மணத்துடன் அளிக்கிறான் ஒரு கவிஞன், ஆம் தமிழர்களுக்குத்தான்

நீண்டு வளர்ந்த நெடு முடியை நிதம்
நீருண்ட மேகம் தழுவலையோ
நீலக் கடலிற் புரண்டு வரும் திரை
போய் ஒன்றொன்றனை கவ்வலையோ
ஓடும் சிறு நதி ஆடி வந்தே கடல்
ஓடு கலந்து குலாவலை யோ
ஓல மிடும் வண்டும் கோல மலர்களில்
ஒன்றியிருந்து தேன் உண்ணலையோ
இந்நிலம் தன்னிலே தன்னந் தனியாக
எய்திடும் ஒருயிர் எங்கு முண்டே
என்னைக் கலந்து நீயின்பந் தராவிடில்
யாது பொருள் இந்தக் காதலுக்கே

என்றெல்லவா கேட்கிறான். அப்படித் தன் காதலியைக் கேட்டுக் கொண்டேதானே காதற்கடவுள் - கல்லுருவில் காட்சி கொடுக்கிறான்.