பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



56

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

அனுமனுடைய அறிவை, ஆற்றலை, பக்தியை எல்லாம் எப்படி எப்படி எல்லாமோ பாராட்டியிருக் கிறர்கள் கவிஞர்கள். அத்துடன் அவன் எடுத்த அந்த பேருருவை - விசுவ ரூபத்தையுமே கற்பனை பண்ணி மகிழ்ந்திருக்கிறார்கள். எண்ணரிய சக்திகளை யெல்லாம் ஒழுக்கத்தின் உயர்வால் பெற்ற ஒருவன் மக்கள் சிந்தனை யில் எவ்வளவு உயர்ந்து விடுகிறான் என்பதைத் தானே இப்படி விசுவரூபமாகக் காட்டி விளக்குகிறார்கள் கலைஞர்கள்.

காவியம் மூலம் காணும் இந்த விசுவரூபத்தை ஒவியம் - சிற்பம் மூலம் காண்பது மிகவும் எளிதாக இருக்கும். மரத்திலே, செம்பிலே வடித்தெடுத்த பெருமை, தமிழ் நாட்டுக்கு உண்டு. நாமக்கல் கோட்டைக்கு வெளியே நாசிம்ம சுவாமி சந்நிதிக்கு மேற்கே இருக்கும் அனுமனும் க்ன்னியாகுமரியை அடுத்த சுசீந்திரத்திலே தானு மாலயன் கோயிலே நிற்கும் அனு மனும் கல்லுருவிலே பெரியவை தான். இரண்டிடத்தும் அனுமன், அஞ்சலி ஹஸ்தனாக ஏவல் கூவல் பணி செய்ய எப்பொழுதுமே தயார் என்ற நிலையில்தான் நிற்கிறான். ஆதலால் அங்கெல்லாம் உங்களை இழுத்துப் போக விரும்பவில்லை இப்போது.

அவன் எடுத்த பெரிய உருவத்திற்கேற்ற பெருமை ஒரு சிறிதும் குறையாமல் மூன்று சின்னஞ்சிறிய ஊர்களிலே இருக்கும் அனுமனைத்தான் காட்ட விரும்புகிறேன் நான். வட ஆற்காடு ஜில்லாவில் ஆரணி ரோட்டு ரயில் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருப்பது களம்பூர். இந்த களம்பூரை அடுத்த சிறிய ஊர் தான் கஸ்த்தம்பாடி. இந்த ஊரில் எளிய வாழ்வு வாழ்வதற்கே கஷ்டப்படும் குடி ஜனங்கள்தான் உண்டு.

இந்த ஊரிலே ஒரு சிறு கோயில். அந்தக் கோயிலுக்குள்ளே ஒரு சிறு சந்நிதி அனுமனுக்கு. அங்குள்ள