பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

57

அனுமனை வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர் அன்பர்கள். சிறை இருக்கும் செல்வியைத் தேடி இலங் கைக்குத் தாவ விரும்பும் அனுமன் மகேந்திர மலையில் ஏறுகிறான். பேருருவோடு கிளம்புகிறான். அந்த நிலையை


வால் விசைத்து எடுத்து,
வன்தாள் மடக்கி
மார்பு ஒடுக்கி, மானத்
தோல் விசைத் தோள்கள்
பொங்க, கழுத்தினைச்
சுருக்கித் தாண்டும்
கால் விசைத் தடக்கை

நீட்டி - மேல் விசைத்து எழுந்தான் என்று கம்பன் கூறுகிறான். இத்தனையும் சொல்லி விட்டு, இந்தக் காட்சியை கண்கள் நெடுநேரம் கண்டு அனுபவிக்க முடிய வில்லை. காரணம் அதற்குள் அவன் விண்ணில் பறந்து விடுகிறான் என்கிறான் கம்பன். ஆனால் மகேந்திரமலை யில் நின்று புறப்படும் நிலையை அப்படியே படம் பிடித்து விடுகிறான் ஒரு சிற்பி. அந்த நிலையை ஒரு கலை உருவமாகக் கல்லிலே செதுக்கியும் வைத்து விடுகிறான்.

பாய்வதற்குத் தயாராகும் நிலையிலே அமைந்த திரு உருவம் தான், கஸ்தம் பாடியிலே இருக்கிறது. கட் புலனுக்கு எட்டாத வண்ணம் அன்று அனுமன் இருந்தான் என்று கம்பன் கையை விரித்தாலும், கலைஞன் கையை விரிக்காமல், அந்த நிலையை இன்னும் நாம் கண்குளிரக் காணும் வண்ணம், கற்பித்து நிறுத்தி விடுகிறான்.

கல்லிலே கண்ட அஞ்சனை புதல்வனை மரத்திலே காணவேண்டுமானால் கோவை ஜில்லாவினுக்கே போக வேணும், பொள்ளாச்சியை அடுத்த ஊத்துக்குழி என்ற