பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4

தோன்றவில்லையே. அனுமனது விஸ்வரூபம், கோதையின் அழகிய கோலம், இரண்டு கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. கோதையின் அழகிய கோலத்தை காணத்தான் எப்படியெல்லாம் அலைந்திருக்கிறார்கள் என்று அறிகின்ற போது வியப்பாக இருக்கின்றது. அப்படித்தான் ராஜ கம்பீர நாடாளு நாயகனான, அந்த வேலுக் குரிச்சி வேட்டுவனாம் முருகனைத் தேடி அலைந்த கதையும் நம்மை பரவசப்படுத்துகிறது. கலை தேடி அலைந்த காதல் என்றால் இதுதான் போலும்.

காலமெல்லாம் கலைப்பணிக்காகவே கோயில் கோயிலாக வலம் வந்தவர்கள் தந்தையார். எத்தனையோ தலங்களுக்கு அவர்களுடனேயே போயிருக்கிறோம். ஆனாலும், அந்த அழகை அவர்கள் எடுத்துச் சொல்லும்போது எல்லாமே புத்தம் புது அனுபவம் போலத் தோன்றுகிறது. திருச்செங்கோட்டுக்கு உடன் அழைத்துப் போய், ஒவ்வொரு மூர்த்தியாய்க் காட்டி விளக்கியது இன்றும் எனக்குப் பசுமையாய் நினைவிருக்கிறது. பேராசிரியர் சீனிவாச ராகவன் சொல்லியது போன்று, தொண்டை மான் அவர்களுடைய கட்டுரைகளைப் படிக்கும்போது, அவர்களே நம் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு போய் கோயிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் நேரில் உடனிருந்து விளக்குவது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. தொண்டைமான் அவர்களின் நோக்கமும் அதுதான். தாம் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டும் என்பது. இந்தக் கட்டுரைகளின் பயனும் அதுதான். இந்தக் கட்டுரைகளை ஒரு முறை படித்தால் போதாது. பலமுறை படிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அருமை பெருமை பிடிபடும்.

இந்த நூலுக்கு நல்லதொரு முகவுரை வழங்கியிருக்கிறார், வித்வான் திரு. ல, சண்முகசுந்தரம் அவர்கள், ரசிகமணி டி.கே.சியின் நண்பர் வட்டத்தில் முக்கியமானவர். ரசிகமணியின் குரலாக, இன்றும் ஒலிபரப்பிக் கொண்டவர். அவர் தாம் அறிந்த