பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

59

நின்றால், ஒருவரை ஒருவர் வெல்வது கூட எளிதாக இருக்கும். எல்லோருமே சேர்ந்து ஓர் உருவமாக நின்றுவிட்டால் அந்த வடிவினை வெல்லுதல் என்பது அசாத்தியமே.

அத்தகைய திருஉருவம் தானே உண்மையில் விசுவரூபமாக இருக்க முடியும். அளவில் மட்டும் பெரியதாய் இராமல், ஆற்றலிலும் பெரியதாய் இருக்க வேண்டு மல்லவா. இத்தகைய விசுவருப தரிசனமே கிடைக்கிறது நமக்கு இங்கே சிவனுடைய நெற்றிக்கண், மான் மழு எல்லாம் இந்த உருவில் அமைந்து விடுகிறது. விஷ்ணுவோ தன் சங்கு சக்கரம், வில், வாள் எல்லா வற்றையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். இந்திரனுடைய வஜ்ஜிராயுதம், கேடயம் எல்லாம் வந்து சேர்ந்து கொள்கிறது.

யமனுடைய பாசத்தையும் சூலத்தையுமே பறித்துக் கொள்கிறான் அனுமன். இப்படியே பத்துக் கைகளிலும் பத்து ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை எல்லாம் தாங்கும் வலிமை பெற்ற விரிந்த மார்பும் திரண்ட தோள்களும் வேறே. தலையிலே நீண்டுயர்ந்த மணி மகுடம். இத்தனையும் ஏந்தி நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான தோற்றம். எல்லாம் சேர்ந்து கலை உலகத்தில் இந்தச் சிலா உருவத்திற்கு ஓர் உயரிய ஸ்தானத்தையே அளிக்கிறது.

இந்த உருவத்தைதான் பார்க்கிறீர்கள் பக்கத்திலே. வசதி உள்ளவர்கள் எல்லாம் நேரிலும் சென்று காணலாம். மாயவரம் தரங்கம் பாடி ரோட்டிலே திருக்கடவூருக்கு கிழக்கே மூன்று நான்கு மைல் போனால் - அனந்த மங்கலம் இங்கே இருக்கிறது என்று வடதிசையைக் காட்டிக் கொண்டு ஒரு கைகாட்டி நிற்கும். அந்தக் கைகாட்டிய திசை வழி அரை மைல் சென்றால் ஒரு சிறு