பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

63


நானோ விடாக் கண்டன். கோயிலில் வேறு எங்காவது சிலை வடிவில் நிற்க மாட்டாளா அவள், என்று ஏங்கும் உள்ளத்தோடேயே கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

அப்போது பட்டாச்சாரியர் பையன் ஒருவன் என்னுடன் வந்தான். அவன் சொன்னான், சார், இங்கு அந்தப் பெரியாழ்வார் பாதுகாத்து வந்த நந்தவனம் ஒன்றிருக்கிறது. அங்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. அங்கு ஆண்டாளின் வடிவம் ஒன்றும் இருக்கிறது. அதைப்படம் கூட எடுக்கலாம் என்றான். சரி, என்று அந்தப் பையனைக் கையில் போட்டுக் கொண்டு, வேறு பட்டாச்சாரியர்களுக்கோ, இல்லை, நிர்வாக அதிகாரிக்கோ தகவல் ஒன்றும் கொடுக்காமல் நானும் பையனும் பெரியாழ்வர் வளர்த்த நந்தவனத்தை நோக்கி நடந்தோம். அது ஆண்டாள் கோயிலுக்கும் வடபத்ரசாயி கோயிலுக்கும் இடையே இருக்கிறது. நல்ல மதிற் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது. நந்தவனத்தில் புஷ்பங்கள் அதிகமில்லை. முன் மண்டபத்தோடு கூடிய சிறிய கோயில் ஒன்று இருக்கிறது.

அக்கோயிலுள் சுமார் மூன்றடி வடிவத்தில் சிலை உருவில் ஆண்டாள் நிற்கிறாள். அவளோ என் வருகையை எதிர் நோக்கியிருந்தவள் போல கதவுகளை எல்லாம் திறந்து வைத்துக் கொண்டே நின்றாள். நந்த வனத்தில் கோடி சூரியப் பிரகாசத்துடன் அன்று துளசியடியில் கிடந்த குழந்தையாம் கோதை, அங்கு குழந்தையாக இருக்கவில்லை. கொஞ்சம் வளர்ந்து பெரியவள் ஆகியிருந்தாள். கட்டுக்கட்டென்று நின்ற அவள் வடிவிலே நிறைந்த அழகு காணப்படவில்லை. அவளைப் படம் பிடித்து உங்கள் முன் இங்கு நிறுத்தியிருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்க