பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கடலுக்கடியில் முத்தையும் பவளத்தையும் பரப்பி வைக்கிறான். அத்தனையும் உனக்கே என்று வாரி வாரிக் கொடுத்து மனிதனை மயக்கப் பார்க்கிறான். இந்தப் பொன்னாலும், பொருளாலும், மரங்களாலும், மதுவாலும் அவர்களைக் கெடுக்க முடியவே இல்லை. கடைசியில் ஒரு பெண்னைப் பிடித்து அவனிடம் அனுப்பி வைக்கிறான். அவ்வளவுதான் மனிதன் கெட்டே போய் விடுகிறான். இப்படி ஒரு கதை.

இரண்டு கதையும் உண்மையாய் நடந்த கதை அல்ல. இரண்டுமே கலைஞனது கற்பனையில் உதித்தவை தான் பெண் மனிதனை வாழ்விக்க வந்தவள். அவனுக்கு அளப்பரிய இன்பத்தை அளிக்கக் கூடியவள் என்ற ஒர் அடிப்படையான எண்ணத்திலே உருவானது தான் முதல் கதை. எவ்வளவோ ஒழுக்கமாக வாழும் மனிதனும், ஆம் பொருளினாலும், மதுவாலும் கெட்டொழிந்து போகாத மனிதனும் பெண்ணாலே கெட்டுப் போய் விடுகிறான் என்ற உண்மையை விளக்க எழுந்ததுதான் இரண்டாவது கதை.

இரண்டு கதைகளிலுமே உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மனிதனை வாழ்விப்பவளும், தாழ்விப்பவளும் பெண்ணே தான் என்ற உண்மை, பிரான்ஸ் தேசத்திற்கு மட்டும் தெரிந்த உண்மையில்லை. உலகமே ஒப்புக் கொண்ட உண்மைதான்.

ஆனால் தமிழன் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறான். எப்படியோ பூமியிலே வந்து நிலைத்து விட்ட மனிதனும் பெண்ணும் தங்களைப் படைத்த தலைவனை அறிய முற்படுகிறார்கள். மனிதன் சொல்கிறான், இந்த இறைவன் ஆண்மகனாகத்தான் இருக்க வேண்டும் என்று. பெண் சொல்லுகிறாள், அந்தப் பரம்