பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

(வித்வான் ல. சண்முகசுந்தரம்)

முழு நிலாப் போன்ற வட்டமுகம், அகன்ற நெற்றி, புன்முறுவல் பூக்கும் அதரங்கள், அன்பர்களையும் நண்பர்களையும் தழுவி அணைக்கும் கண்கள், உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட ஓங்கு தாங்கான கரிய திருமேனி. இப்ப்டி ஒரு தோற்றப் பொலிவோடு அரசதோரணையில் நடமாடியவர்தான் அறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். ஒரு போர்வீரனின் வல்லமை மிக்க உடம்பை விட வலுவான உடல் படைத்தவர்தான் தொண்டைமான். ஆனாலும் அந்த உடம்புக்குள் மலரினும் மெல்லிய இதயம் பூத்துக் கிடந்தது. இலக்கியம், சிற்பம். ஒவியம், கம்பர், தமிழ், இசை, விருந்தோம்பல், அன்பு, நன்றி மறவாமை, பொறையுடைமை, நேர்மை, உறுதி என்று இதழ் இதழாக விரிந்து மணம் பரப்பியது அந்த இதயத் தாமரை.

பாஸ்கரத் தொண்டைமானை அப்படியே ஒவியத்தில் வரைந்து காட்ட முடியும். ஆனால் அந்த இதயத் தின் உணர்ச்சித் தேனை, தமிழ்க்காதலை கலை