பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

வளர்ந்தோங்கிக் கொண்டே வந்த இறைவனுக்கும் இறை விக்குமே திருமணம் முடித்து வைக்கவும் துணிந்து இருக்கிறான். ஒரு வேளை இவர்கள் திருமணத்தை இவன் இருந்து நடத்தி வைக்கா விட்டால் அவர்கள் வாழ்க்கை மனம் பெறாது என்று எண்ணினானோ என்னவோ!

கற்பனை பிறந்தது கலைஞனுக்கு, கதை பிறந்தது கவிஞனுக்கு, கதை இது தான்.

கயிலையில் அம்மையும் அப்பனும் வீற்றிருக்கிறார்கள். அந்த அனாதி காலத்தில் இருந்தே, தக்ஷன் மகள் தாகூடிாயணி தந்தை தன் கணவனை மதியாத காரணத்தால், யாக குண்டலத்திலேயே புகுந்து மறைகிறாள். இதனால் அவமானம் உறுகிறாள். இதனால் தான் திரும்பவும் ஒரு பிறப்பு எடுத்து இறைவனை அடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறாள். பிராத்தனை நிறைவேறுகிறது, பர்வத ராஜன் புத்திரியாகப் பிறந்து, அவன் மனைவியால் வளர்க்கப்படுகிறாள். இறைவனையே தான் நாயகனாக அடைய தவம் புரிகிறாள், என்றெல்லாம் கதை வளருகிறது.

உமையைப் பிரிந்த உமாமகேஸ்வரன் மோனத்தில் இருக்கிறான், முனிவர்கள் மயக்கங்கள் எல்லாம் தீர. அதனால் எல்லாத் தொழிலுமே ஸ்தம்பித்து விடுகிறது. மோனத்தைக் கலைக்க மன்மதனையே ஏவி விடுகிறார்கள் மற்றத் தேவர்கள்; மோனம் கலைகிறது. ஆனால் மன்மதன் வெந்து பொடி சாம்பலாகி விடுகிறான். மோனம் கலைந்து இறைவன் பர்வதராஜன் புத்திரி பார்வதியை மணந்து கொள்கிறான்.

பர்வதராஜன் புத்திரியை பரமேஸ்வரனுடன் சேர்க்கும் முயற்சியில் வெற்றி கண்டு விடுகிறான் மன்மதன், இந்த முயற்சியில் அவன் அழிந்தே போனான் என்றாலும் கூட காமனை வெல்வது கடவுளுக்கே சாத்யமில்லை என்ற