பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

81

நிலையல்லவா ஏற்பட்டு விடுகிறது. அன்றுதான் பிறக்கிறது கவிதையும் காவியமும், இசையும் நடனமும் சித்திரமும் சிற்பமும்.

"மலையரையன் பொற்பாவை வாள்துதலாள் பெண் திருவை உலகறியத் தீ வேட்டவனுடைய பெருமையை உலகறியப் பாடுகிறார் மணிவாசகர். அப்படி உலகறியத் தீ வேளாது ஒழிந்தினனேல் கலை நவின்ற பொருள்க ளெல்லாம் கலங்கி விடும் உலகனைத்தும் என்றும் உரைத்து விட்டார்.

இனிச் சந்தேகம் இல்லையல்லவா, கலை பிறக்குது காதலிலே, ஒரு சிலை பிறக்குது அந்தக் கதையினிலே, தஞ்சையில் கலைக்கூடம் நிறுவிய பின் தஞ்சை ஜில்லாவின் பல கிராமங்களில் மண்ணுக்குள் மண்ணாய் மறைந்து கிடந்த சிலா உரு வங்கள் பல வெளி வர ஆரம்பித்து இருக்கின்றன. அப்படி வெளி வந்தவைகளில் சிறந்த சிற்பச் செல்வந்தான் திரு வெண்காட்டில் இருந்து கிடைத்த செப்பு விக்ரஹங்கள் எட்டு, அவைகளில் நான்கு ஒரு நல்ல அமைப்பு.

அந்த நாலு விக்ரஹங்கள், நான் மேலே சொன்ன கதையை நமக்கு அறிவிக்கின்றன. புதிதாக மணமுடித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு விரைவாகவே கயிலை செல்லத் துடிக்கிறார் சிவபெருமான். எட்டியே நடை போடுகிறார். முன் எவ்வளவோ நாள் பழகியவள் தான் என்றாலும் இன்று அவள் புது மணப் பெண்தானே. அதனாலே நாணிக் கோணி நிற்கிறாள்.

இந்த நிலையைக் காண்கிறாள் கலைஞன். அவன் உள்ளத்தில் உருவாகிறது சிலை. வலது கை நீண்டு வளைந்து இறைவனின் வலக்கரத்தைப் பற்றி மகிழ, இடக்கரம் லாகவமாய் மேல் நோக்கி நானும் தலைக்குப்

ஆ.பெ.அ.நெ-6