பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

85

உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உருவாக்கி, அதன் மூலம், நாடகம் காண வருபவர்களின் உள்ளம் கவர்வதைத் தானே நல்ல நாடகம் என்கிறோம் நாம்.

ஆனால் இத்தகைய நாடகம் நடிப்பதற்கு, நல்லதொரு அரங்க மேடை வேண்டும். வர்ண விஸ்தாரம் நிறைந்த காட்சி ஜோடனைகள் வேண்டும்; சிறந்த நடிகர்கள் வேண்டும்; அவர்களுக்கு உயர்ந்த ஆடை அணிகள் வேண்டும்; பின்னணி வாத்திய கோஷ்டி வேண்டும்; முன்னாலே மின் சார விளக்குகள் வேண்டும். இத்தனையும் ஒன்றாய்க் கூடி நாடகம் உருவாக வேண்டும்.

இப்படி நடத்தப் பெறும் நாடகம் ஒரு நாள் நல்ல வாய்ப்பான நாடகமாக அமையும், இன்னொரு நாள் அழுது வடியும். நடிப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் தாமே. எப்பொழுதும் ஒரே நிலையில் அவர்கள் இருக்க இயலாதவர்கள் ஆயிற்றே. நாடகத்தின் வெற்றியும் தோல்வியும் நாளையும் கிழமையையும் பொறுத்ததாகி விடுகிறது.

ஆனால், அரங்கம் இல்லாமல், திரைச்சீலை இல்லாமல், காட்சி ஜோடனைகள் இல்லாமல், பின்னணி வாத்தியமில்லாமல். மின்னும் விளக்குகள் இல்லாமல் நாடகம், நடத்தத் தெரிந்தவர்கள் தமிழ் நாட்டுக் கலைஞர்கள். அந்தக் கலைஞர்கள் வரிசையில் முதலில் நிற்பவன் கவிச் சக்கரவர்த்தி கம்பன். இராம கதையை காவியமாக எழுத முனைந்தவன், இராம நாடகத்தையே அல்லவா நடத்துகிறான். அழகான காட்சிகளை உருவாக்கி, அதில் அற்புதமான பாத்திரங்களை நடமாட விட்டு, இதயத்தைத் தொடும் இன்னிசை எழுப்பி, சிறந்த நாடகத்தையே நடத்தி விடுகிறான். அடுத்தடுத்து வரும். அழகான காட்சிகள் ஒன்றா இரண்டா? ரஸானுபவங்களும் ஒன்பதா, பத்தா? எத்தனை எத்தனையோ விதத்தில்