பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

87

மறக்கிறாள். கயமலர் கண்னினை உடைய ஒருத்தியோ, விழித்த கண் விழித்த படியே நின்று மெய் மறக்கிறாள். இப்படி வந்தவர்கள் ஏழுபேர். 'எல்லோரும் நிறை அழிகிறார்கள். நாணி நிற்கிறார்கள். ஏழு பேருடைய உணர்ச்சியும் ஒன்றே தான் என்றாலும் அதை ஏழு விதமாக அமைக்கிறான் சிற்பி. பொதுவாக நோக்கினால், சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி, இந்நலம் தெரியவல்லார்' எழுதியது என்ன நிற்கின்றார்கள் எழு வரும்.

இவர்களில் இருவரை மட்டும் ஒரு 'குளோஸ் அப்' காட்சியில் பார்க்கலாம். ஒருத்தி தன் மனம் திரும்பவும் திரும்பவும், அந்தக் கங்காளன் பக்கத்தே செல்வதை அறிந்து அந்த மனதை அடக்கி அவன் பக்கமே திரும்பும் முகத்தைத் திருப்ப முயல்கிறாள். இன்னொருத்தியோ, தன் நானத்தை எல்லாம் மறைக்க, இந்தப் பெண் பின்னாலேயே மறைந்து நிற்க விரைகிறாள். இருவரும் காணுவ தெல்லாம் கங்காளன் அழகைத்தான். இருவர் உள்ளமும் குதுகலிப்பதும் அதனால்தான்; இருவர் உடை நெகிழ்வதும், வளை கழல்வதும் அதனால் தான். கம்பன் சொன்னான், இராமன் அழகு கண்டு மிதிலைப் பெண்கள் நின்ற நிலையை 'தன்னையும் தாங்கலாதார் துகில் ஒன்றும் தாங்கி நின்றார்' என்று. அந்த நிலையில் தான், தம்மையே தாங்க இயலாத இவர்கள் நழுவும் துகிலைத்