பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

95

இந்தப் பழனியாண்டியோ, மொட்டை அடித்து, கோவணம் மாத்திரமே கட்டிக் கொண்டு கோலூன்றி எல்லாவற்றையும் துறந்த நிலையிலே அல்லவா நிற்கிறான். அவனை வீட்டில் வைத்து வழிபட்டால் நம்மையுமே மொட்டை அடித்து எல்லாவற்றையும் துறக்கும்படி செய்து விடுவானோ என்னவோ என்ற பயம். ஆதலால் யார் படத்தைப் பூசையில் வைத்திருந்தாலும் பழனியாண்டவன் படத்தை வைத்திருத்தல் கூடாது. இப்படி ஒரு எண்ணம்.

இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதைக் காட்டவே இச்சிறு கட்டுரை. இறைவனை எந்த மூர்த்தத்தில் வேண்டுமானாலும் வைத்து வணங்கலாம். 'ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடித்தெள்ளேனம் கொட்டத்' தெரிந்தவன் தமிழன்.

'இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன், என்று எழுதிக் காட்ட ஒண்ணாத ஒருவனைப், பல கோலங்களில் கல்லிலும் செம்பிலும் ஆக்கி நாடு முழுவதும், கோயில்கள் தோறும் நிறுத்தத் தெரிந்தவன் தமிழன். 'கற்பனை கற்பிக்கும் கடவுளின்’ கோலத்தில் எந்தக் கோலமும் வந்தித்து வணங்கி வழிபாடு செய்வதற் குரியதே.

அதிலும் இளைஞனாக, அழகனாக, வீரனாக எல்லாம் காட்சிகொடுப்பவன் முருகன். மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டுபவன் அவன். அவன் வடிவங்களில் ஒருவடிவமான பழனியாண்டவன் திருக்கோலம் எப்படி எழுந்தது என்று அறியலாம் தானே.

முருகன் இளைஞனாக, அழகனாக மட்டும் இருக்கிறவனில்லை. சிறந்த வீரனாகவும் இருப்பதை தேவ