பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 7


Alcohol : வெறியம்; மதுச்சத்து; போதைநீர்; சாராயம்

Alcohol Industry : மதுச்சத்துத் தொழில்

A letter to this effect : இவ்வகையான ஒரு கடிதம்

Algebra : குறிக்கணக்கியல்

Alienable Right : உடைமை மாற்றத்தக்க உரிமை; கைமாற்றத்தக்க உரிமை

Alienation of land : நில உரிமை மாற்றல்

Alienation of Revenue : நிலவரி நீக்கம்

Align : வரிசைப்படுத்து; ஒழுங்குபடுத்து

Alignment : இயைவு நிலை; ஒப்புதல்

Alimony : வாழ்க்கைப்படி; சீவனாம்சம்

Allegation : சாட்டுரை; குறை கூறல்

Alleged Right : சொல்லப்படுகின்ற உரிமை; குறிப்பிடப்படுகின்ற உரிமை

Allied Trade : தொடர்புடைய வணிகம்

Allied Trade Instructor : துணைத்தொழில் ஆசிரியர்

All India level : அனைத்திந்திய நிலை

All India Service : அனைத்திந்திய பணி

Allocation of Fund : நிதி ஒதுக்கீடு

Allocation of Seat : இட ஒதுக்கீடு

Allopathy : ஆங்கில மருத்துவம்; எதிர்மறை மருத்துவம்

Allotment Register : பங்கீட்டுப் பதிவேடு

Allowance : படி

Alms House : இரவலர் இல்லம்

Alphabetical List : அகரமுதலிப் பட்டியல்; அகரவரிசைப் பட்டியல்

Alphabetical Order : அகரமுதலான முறை

Alpha System of filing : அகரமுதலிக் கோப்பு முறை

Alteration Memo : மாற்றக் குறிப்பு

Alternative Charge : மாற்றுக் குற்றச்சாட்டு

Alternative Occupation : மாற்றுத் தொழில்

Alternative Vote : ஒற்றை மாற்று வாக்கு

A.M. : முற்பகல்

Amateur : கலைத்தொழில் சாராக் கலைஞன்