பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 11


Archaeologist : தொல்பொருள் அறிஞர்

Architect : கட்டடக் கலைஞர்

Architecture : கட்டடக் கலை

Architecture and structural Engineering : கட்டடக் கலையும் அமைப்புப் பொறியியலும்

Architectural Assistant : கட்டடக் கலை உதவியாளர்

Architectural Draftsman : கட்டடக்கலை வரைவாளர்

Arithmatic : எண் கணக்கு

Armament : போர்த் தளவாடங்கள்

Armed Force : ஆயுதப் படை

Armed Reserve Police : ஆயுதச் சேமப் படைக் காவலர்

Armoury : படைக்கலக் கொட்டில்

Arms Act : படைக்கலச் சட்டம்

Arms and Ammunition : போர்க்கருவிகளும் தளவாடங்களும்

Arms Licence : படைக்கல உரிமம்

Arrack : சாராயம்

Arrangment : குற்றஞ் சாட்டுதல்

Arrear : நிலுவை

Arrear Bill : நிலுவைப்பட்டி

Arrear Claim : நிலுவைக் கோரிக்கை

Arrear Collection : நிலுவைத் தண்டல்

Arrear List : நிலுவைப் பட்டியல்

Arrears of Pay : சம்பள நிலுவை

Arrears of Pension : ஓய்வூதிய நிலுவை

Arrest and Detention : கைது செய்து காப்பில் வைத்தல்

Arrest Warrant : கைது செய்வதற்கான பற்றாணை; கைது செய்வதற்கான கட்டளை

Arrest without warrant : பற்றாணையில்லாக் கைது; கட்டளையில்லாக் கைது

Art Gallery : கலைக்கூடம்

Article of constitution : அரசமைப்புச் சட்டப்பிரிவு

Articles of Association : சங்க அமைப்பு விதிகள்

Articles of Peace : அமைதிக்கான ஒப்பந்த விதிகள்

Articles of War : போர் விதிகள்

Artisan inams : கைவினைஞர் மானியம்