பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 27


Complaint Cell : குறையீட்டுப் பிரிவு

Compounded Tax : கூட்டு வரி

Compounder : மருந்து கலப்பவர்; மருந்து கலவையர்

Compound Rate of Tax : கூட்டுவரி வீதம்

Compromise Talks : இணக்கத் தீர்வுப் பேச்சு; ஒத்திசைவு உடன்பாட்டுப் பேச்சு

Comptroller and Auditor General : மைய அரசு கணக்குத் தணிக்கைத் தலைவர்

Comptroller of Audit and Accounts :மைய அரசு கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர்

Compulsory Acquisition : கட்டாய கையகப்படுத்துகை

Compulsory Acquisition of Land : கட்டாய நிலக்கையகப்படுத்துகை

Compulsory Education : கட்டாயக் கல்வி

Compulsory Enforcement : கட்டாயச் செயலாக்கம்

Compulsory Labour : கட்டாய உழைப்பு

Compulsory Registration : கட்டாயப் பதிவு

Compulsory Retirement : கட்டாய ஓய்வு

Compulsory Savings Deposit : கட்டாயச் சேமவைப்பு

Computing : தொகுத்தல்

Concurrent Audit : உடனிகழ் தணிக்கை ; ஒருங்கியல் தணிக்கை

Concurrent Auditor : உடனிகழ் தணிக்கையாளர்; ஒருங்கியல் தணிக்கையர்

Condition precedent : முன் நிபந்தனை

Conditions of Licence : உரிம வரையறைகள்

Conditions of Service : பணிமுறைமைகள்

Conditions of Tender : ஒப்பந்தப்புள்ளி வரையறைகள்

Conditions of Works : வேலை முறைமைகள்

Conditions stipulated : குறிப்பிடப்பட்ட வரையறைகள்

Condolence Meeting : இரங்கற் கூட்டம்

Condonation : பிழை பொறுத்தல்; மன்னிப்பு; பொருட்படுத்தாதுவிடல்

Conference Hall : மாநாட்டுக் கூடம்