பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 29


Contingent Expenditure : சில்லறைச் செலவினம்

Contingent Register : சில்லறைச் செலவினப் பதிவேடு

Contingent Staff : சில்லறைச் செலவினச் சம்பளப் பணியாளர்

Contract Committee : ஒப்பந்தக்குழு

Contract of Service : பணி ஒப்பந்தம்

Contractor : ஒப்பந்தக்காரர்

Contrary : எதிர்நிலையான; முரண்பாடான

Contributory Negligence : தற்கவனமின்மை

Controlling Authority : கட்டுப்பாட்டு அதிகாரி

Convener : கூட்டுநர்; அவைக்கூட்டுநர்; குழுத் தலைவர்

Conversion Table : மாற்று அட்டவணை

Conveyance Allowance : ஊர்திப்படி

Conveyance Deed : மாற்றளிப்பு ஆவணம்

Convocation : பட்டமளிப்பு விழா

Co-operation : கூட்டுறவு ; ஒத்துழைப்பு

Co-operative Agricultural Bank - கூட்டுறவு வேளாண்மை வங்கி

Co-operative Canteen : கூட்டுறவுச் சிற்றுண்டிச் சாலை

Co-operative Central Bank : கூட்டுறவு மைய வங்கி; கூட்டுறவு வங்கி

Co-operative Credit Bank : கூட்டுறவு நாணய வங்கி

Co-operative Credit Society : கூட்டுறவு நாணயச் சங்கம்

Co-operative Society : கூட்டுறவுச் சங்கம்

Co-operative Super Market : கூட்டுறவுச் சிறப்பங்காடி

Co-operative Union : கூட்டுறவு ஒன்றியம்

Co-ordinating Authority : ஒத்திசைவிக்கும் அதிகாரி

Co-ownership : கூட்டுரிமை நிலை

Copies of Document : ஆவணப் படிகள்; ஆவண நகல்கள்

Copy : படி நகல் ; நகல்

Copy Application : நகல் விண்ணப்பம்

Copy Application Register : நகல் விண்ணப்பப் பதிவேடு

Copy Superintendent : நகல் கண்காணிப்பாளர்

Copying Fees : நகல் கட்டணம்

Copyist : நகலர்