பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 31


Country Liquor : நாட்டுச் சாராயம் ; பட்டைச் சாராயம்

Coupon : கைச் சீட்டு ; அடையாளச் சீட்டு

Course : படிப்புப் பிரிவு; செல்வழி

Courtesy Call : வணக்கக் காணல்; வழக்கக் காணல் ; வழக்கமான சந்திப்பு

Covenant : வரைமொழி; உடன்பாடு

Covering letter : மேல் கடிதம்; இணைப்புக் கடிதம்

Craft Instructor : கைத்திறத் தொழில் பயிற்றுநர்

Craftsman : கைவினைஞர்

Crane : சுமை தூக்கு பொறி

Crane Fees : சுமை தூக்கு பொறிக் கட்டணம்

Crash Programme : மிகு விரைவுத் திட்டம்

Creche : குழந்தையர் காப்பகம்; குழந்தைகள் காப்பகம்

Credentials : அறிமுக ஆவணம்

Credit Head : வரவு வைக்கும் தலைப்பு

Credit Note : வரவுச் சீட்டு; வரவுக் குறிப்பு

Credit Sale : கடன் விற்பனை

Credit Side : வரவுப் பக்கம் ; பரவு நிலை

Creeche Attendants : குழந்தைகள் காப்பகப் பணியாட்கள்

Crematic Ground : சுடுகாடு

Crematorium : சுடலை

Crime Detection : குற்றத் துப்பறிதல்

Crime Statistics : குற்றப் புள்ளி விவரங்கள்

Criminal Breach of Trust : குற்றவியல்புடைய நம்பிக்கை மோசடி; குற்றமுறு நம்பிக்கை மோசடி

Criminal Case : குற்றவியல் வழக்கு

Criminal Complaint : குற்றவியல் குறைபாடு ; குற்றப்புகார்

Criminal Investigation : குற்றவியல் புலனாய்வு; குற்றப்புலன் விசாரணை

Criminal Jurisdiction : குற்றவியல் ஆட்சி எல்லை; குற்றவியல் அதிகார வரம்பு

Crop Insurance : பயிர் ஈட்டுறுதி

Crossed Cheque : குறுக்குக் கோடிட்ட காசோலை

Cross Reference : தொடர்புக் குறிப்பு

Crown grant : அரசு மானியம்