பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 புலமை வேங்கடாசலம்


Debit Head : செலவுத் தலைப்பு; பற்றுத் தலைப்பு

Debit note : பற்றுக் குறிப்பு

Debit side : செலவுப் பக்கம்

Debtor : கடனாளி; கடன்பட்டவர்; கடன் வாங்குபவர்

Decency and Decorum of Office : அலுவலக நற்பாங்கும் சீரொழுங்கும்

Decennium disposal (D.Dis.) : பத்தாண்டு முடிவு (ப.மு.)

Decentralization : பரவல்; பன்முகப்படுத்தல்

Declaratory Judgement : (உரிமை) விளம்பு வகைத் தீர்ப்பு

Decorder : குறிமுறை நீக்கி

Defaulter's Register : தவணை தவறியவர் பதிவேடு; குறைக் குறிப்பேடு

Defective charge : குறைபாடுடைய குற்றச்சாட்டு

Defective report : குறைபாடுடைய அறிக்கை

Defense : எதிர்வாதம்; எதிர்வழக்குரை; மறுப்புரை; பாதுகாப்பு

Defense force : பாதுகாப்புப் படை ; ஏமப் படை

Defense of India Act : இந்தியப் பாதுகாப்புச் சட்டம்

Defense Services Personnel : பாதுகாப்புப் படையினர்

Defraud : ஏமாற்று; மோசடி செய்

Degree : பாகை ; படிநிலை; பட்டம்

Dejure : உரிமைப்படி; சட்டப்படி

Delegate : ஆணைப் பேராள்; பேராளர்; ஒப்படை

Delegation : உரிமைப் பேராளர் குழு; ஒப்படைப்பு

Delivery Order : ஒப்படைப்பு ஆணை

Delivery of Possession : உடைமை ஒப்படைப்பு; துய்ப்புரிமை அளித்தல்

Delivery pipe : வெளியேற்று குழாய்

Demand draft : கேட்புக் காசோலை

Demand notice : கேட்புத்தொகை அறிவிப்பு

Demarcation stone : எல்லை வரையறைக் கல்

Demi-Official correspondence : நேர்முகக் கடிதப் போக்குவரவு

Demi - Official letter : நேர்முகக் கடிதம்

Demi-Official Reminder : நேர்முக நினைவூட்டு

Democracy : மக்கள் ஆட்சி ; சனநாயகம் ; குடியரசு

Demonstrator : செய்முறை விளக்குநர்