டாக்டர். சி. பா.
99
'செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்” என்ற தொடரில், 'நெகிழ்ந்து', 'கூம்பின' என்ற முரண்பட்ட சொற்கள் வந்து முரண்தொடை அமைந்துள்ளன. இது போன்றே, 'செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்' என்ற, தொடரில் 'செங்கல்' என்றும், 'வெண்பல்' என்றும் முரண்பட்ட சொற்கள் இடம் பெற்று முரண்தொடை கொள்ளுகின்றன. இவ்வாறு ஆண்டாள் பாடல்களில் ஆங்காங்கு இயற்கை வருணனையும், சொல்லாட்சிச் சிறப்பும் துலங்குவதனைக் கண்டின்புறலாம். சில சொற்களில் ஒரு காட்சியையே நம்முன் படைத்துக் காட்டிப் பரவசப்படுத்தி விடும் திறம் வாய்ந்தவராகப் பாவை பாடிய பாவை விளங்குவதனைத் திருப்பாவைப் பாடல்கள் முழுவதிலும் காணலாம்.
முன்னிலைப்படுத்தலும் இடித்துரைத்தலும்
பாவை நோன்பியற்றுங்கால் ஆண்டாளுக்கு ஆயர் உடையும் ஆயர் நடையும் ஆயர் பேச்சும் அமைகின்றன என்றும், ஆயர் மங்கையர்மேல் வீசும் பால்மணமும் இவர் மேல் வீசிற்று என்றும் பெரியார் கூறுவர். திருப்பாவை ஆயர் பாடிச் சிறுமியர்களின் மன இயல்பையும் பேச்சையும், சொல்லையும் போக்கையும் வடித்துக்காட்டும் நிழற்படமாகத் திகழ்கின்றது. இவர் அவ்வாயர்பாடி மகளிரை முன்னிலைப் படுத்திப் பேசுவதும். சிற்சில சமயங்களில் விளையாட்டும் வேடிக்கையும் கலந்த சொற்களால் இடித்துரைத்துப் பேசு வதும், இவர் இடத்துக்கேற்றவாறு சொற்களைக் கையாண்டு ஏற்ற வினையை எழிலுற முடிக்கும் திறலினைப் புலப்படுத்தா நிற்கின்றன.
{{gap}இனிச் சான்றுகளைக் காண்போம்.
{{gap}முதலாவது, நெஞ்சை நெகிழ்வித்து முன்னிலைப்படுத்தி ஆயர் மகளிர் உள்ளத்தை ஈர்க்குமிடங்கள் :