பக்கம்:ஆண்டாள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஆண்டாள்


இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்
- திருப்பாவை : 12

8. குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய் - திருப்பாவை : 13

9. எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணா தாய்!
நாவுடையாய்! - திருப்பாவை : 14

10. எல்லே! இளங்கினியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர் கின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லிர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக - திருப்பாவை : 15

இதுகாறும் கூறியவற்றான் திருப்பாவைச் செல்வியின் சொல்லாட்சித் திறம் விளக்கமுறக் காணலாம்.

அவதாரச் செயல்களில் ஈடுபாடு

திருமால் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் ஆண்டாள் மனத்தில் அவர் கண்ணனாய்ப் பிறந்து ஆயர் பாடியில் வளர்ந்த கம்சனை வதைத்து அடியவர் திறத்து அருள் வழங்கிய திறமே முன் நிற்கிறது. அடுத்து, இராமாவதாரம் அவர் மனக்கண் முன் நிழலாடுகிறது. எவ்வகையில் ஆண்டவனின் அவதாரச் செயல்களை ஆண்டாள் விவரிக் கின்றார் என்று காண்போம்.

(அ) கிருஷ்ணாவதாரம்

1. கூரிய வேலையும் போர்க்களத்துக் கொடுஞ்செயலுங் கொண்ட நந்தகோபனின் குமரன்; அழகிய கண்களையுடைய யசோதைப் பிராட்டியின் இளஞ்சிங்கம் போன்ற மைந்தன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/104&oldid=1462102" இலிருந்து மீள்விக்கப்பட்டது